உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம்

1

இது, தடுமாறலை விளக்கும். தட்டுக்கெடுதல், தட்டழிதல் என்பனவும் இப்பொருளவே, தட்டு என்பது வரைகோடு. தடவல் - இல்லாமை, தடவை

பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம். குறை வாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப்பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி வரும். அவ்வாறு தடவி எடுக்கும் அளவு சுருங்கிப் போவதே ‘தடவல்’ எனப்படுவதாம். “இப்பொழுது தடவலாக இருக்கிறது; பிறகு பார்க்கலாம்” என்பதில் இல்லாமைக் குறிப்புண்மை அறிக. சோறுதடவல், கறிதடவல் என்பதும் இது. இனித் 'தட வை’ என்பதும் ‘தடவல்' என வழங்கும். மூன்று தடவல் கேட்டான் என்றால் மூன்றுமுறை கேட்டான் என்பதாம்.

தண்ணீர் காட்டுதல் - தப்பிவிடுதல்

66

'ஒரு கொள்ளைக்கூட்டம் கட்டுப்பாடான அந்த ஊர்க்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது” உனக்கு ஒரு நாள் தண்ணீர் காட்டாமலா விடுவான்; அப்பொழுது உண்மை புரியும்" என்பன போன்ற வழக்குகள் தண்ணீர் காட்டுதல் என்பதற்குத் ‘தப்பி விடுதல்’ என்னும் பொருள் உள்ளதை விளக்கும். தப்பி விடுதலும், நயவஞ்சகமாக ஏமாற்றித் தப்பிவிடுதலாம்.

தண்ணீர் தெளித்தல் என்பது தாரைவார்த்தல் என்பது போன்றதே. தாரை வார்த்தல் கொடைப் பொருள். தண்ணீர் தெளித்தல் என்பது கழித்துக் கட்டல் என்னும் பொருளதாம்.

உன்னைத் தண்ணீர் தெளித்து விட்டார்கள்’ என்றால் உன்னைக் கைவிட்டுவிட்டார்கள். புறக்கணித்துவிட்டார்கள். ஒதுக்கி விட்டார்கள் என்னும் பொருள் தருவதாம்.

கொடுத்த பொருள், கொடுத்தவர் உரிமையை விட்டு நீங்கி டுவதேயன்றோ! அப்பொருளில் வருவது தண்ணீர்

தெளித்தலாம்.

தந்தனாப்பாடல் - வறுமைப்படல்

துந்தனாப் பாடல் என்பதும் இப்பொருள் தருவதே.

பிச்சைக்கு வருபவர் பாட்டுப்பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் வருதல் வழக்கமாதலின் ‘பாட்டுப்பாடுதல்' என்னும் பொருளில் தந்தனாப் பாடுதல், துந்தனாப்பாடுதல் என வந்த