உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

66

_

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

யாட்டுக் காட்டி அத்தன்மையே இயல்பாகப் போய்விட ஆவ தும் உண்டு. அது தொட்டாற் சுருங்கி, உன்னிடம் வராது என்பது வழக்கு.

தொடர்பு - நட்பு, பாலுறவு

தொடு, தொடர், தொடர்பு என்பவை நெருக்கம் காட்டும் சொற்கள். பழக்கத்தாலும், உறவாலும் தொடர்பைக் குறியாமல் அதற்கு மேலும் வளர்ந்து பாலுறவுப் பொருளாகவும் வழக்கில் உள்ளது. அவனுக்கும் அவளுக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு என்னும் வழக்கு அதனைக் காட்டும். ஆனால் இத்தொடர்பு முறையல் முறையாய் ஏற்பட்டது என்பது அறியத்தக்கது.

66

சான்றோர் தொடர்பு” “நட்பாம் தொடர்பு' என்ப வற்றுக்கும் விலக்காம். இத்தொடர்புக்கும் உள்ள எதிரிடைப் பொருள் பெரிதாம்.

தொடுதல் - அயற்பால்மேல் கைபடல், வஞ்சினம் கூறல்

தொடுதல் என்பது இயல் நிலையில் குறைவற்றது. ஆனால் தாடுதற்கு உரிமையில்லாரைத் ‘தொடுதல்' என்னும் வழக்குப் பொருளில் இடம் பெறும்போது பழிப்புக்குரியதாகின்றது. ‘தொடுப்பு' என்பதும் பாலுறவுச் சொல்லாக வழக்கில் உண்டு.

இனிப் பகையுடையார் “என்னைத் தொடு பார்க்கலாம்; தொட்டுவிட்டு உயிரோடு போய்விடுவாயா?” என வஞ்சினங் கூற இடமாக மாக இருப்பதும் தொடுதலாக அமைகின்றது. தொவித்தல் - தோல் போக்கல், இடித்தல், அடித்தல்

தோல் என்பது தொலி எனவும் வழங்கும். தவசங்களின் தோலைப் போக்குமாறு உலக்கையால் இடிப்பதைத் தொலித் தல் என்பது வழக்கு. அவ் வழக்கில் இருந்து அடித்தல் பொரு ளும் உண்டாயிற்று. ாயிற்று. 'சண்டை ‘சண்டையில் தொலித்து விட்டான்’ என்பது கடுமையாக அடித்துவிட்டான் என்னும் பொருளுடன், தோல் உரியக் காயங்கள் உண்டாக்கி விட்டான் என்னும் பொரு ளும் உண்டாயிற்று. அடித்தல், தொலித்தல், குற்றுதல் என்பன வெல்லாம் இடித்தல் சார்புடைய சொற்களே.

நக்கிக் குடித்தல் - உழையாமல் உண்ணல்

66

ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கவேண்டும்" என்பது என்பது பழமொழி. நாய் நீரை நக்கிக்