66
வழக்குச் சொல் அகராதி
115
'உனக்கிருக்கும் பகுமானத்தில் எங்களை நினைக்க முடியுமா?” உன் பகுமானம் உன்னோடு; எங்களுக்கென்ன ஆகப்போகிறது உன் பகுமானத்தை வேறுயாரிடமும் வைத்துக்கொள்” என்பன வெல்லாம் பகுமானச் செய்திகள், பகுமானம் என்பது தற் பெருமை, செருக்கு ஆணவம் என்றெல்லாம் சொல்லப்படுவ தற்குப் பொதுமக்கள் சொல்லும் வழக்குச் சொல்லாம்.
பச்சை காட்டல் - வழி பிறத்தல்
பச்சைக்கொடி காட்டல் என்பதும் இது. தொடரி (Train) புறப்படுவதற்கு நிலையங்களில் பச்சைக் கொடி காட்டுவர். பச்சைக்கொடி காட்டிவிட்டால் "தடையில்லை; போகலாம்’ என்பதற்கு அடையாளம். அதுபோல், பெற்றோர் சம்மதித்து விட்டாலும், தனக்கு மூத்த ஆணோ, மணப்பருவம் வாய்ந்த பெண்ணோ உடன் பிறந்தாருள் இல்லாவிடினும், “இனி என்ன னி பச்சைக்கொடி காட்டியாயிற்று; மண ஏற்பாடு செய்ய வேண்டி யதுதானே" என்பர். பச்சைக் கொடிகாட்டல் தடையில்லை என்னும் பொருளின் வழி, வழி பிறத்தலைக் காட்டுவதாம். வீட்டில் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள் என ஒப்புதலால் உவப்பார் மிகப் பலர்.
பச்சை நோட்டு - நூறு உரூபாத்தாள்
ஒருவர் மாட்டை விற்க - வாங்கத் தாம்பணிக்குப் போகுங் கால், இடைத் தரகர் வாங்குவார் விற்போர் இடையே, வாயால் பேசாது கை விரலால் பேசுவது வழக்கம். அவர்கள் அதற்கெனச் சில குறியீடுகள் வைத்துளர். சில விரல்களைப் பிடித்து இத்தனை பச்சை நோட்டு என்பர். பச்சை நோட்டு என்பது நூறு உருபா என்பதாம். கடுவாய் நோட்டு என்றாலும் நூறு உருபாவேயாம். மற்றை உருபா நோட்டுகளினும், நூறு உருபா நோட்டு வண்ணம் வேறுபட்டுப் பச்சையாக இருந்திருத்தல் வேண்டும். இல்லை யேல் பச்சை செழிப்பு ஆதலால் வளமான பெரிய தொகை. நோட்டைக் குறித்திருத்தல் வேண்டும். நோட்டு = பணத்தாள். பசப்புதல் - நயமாகப் பேசி ஏய்த்தல்
இல்லாததை இருப்பதாகக் காட்டி, சொல்லாத வகை யெல்லாம் சொல்லி, நம்புமாறு நடித்தல் பசப்புதலாக வழங்கு கிறது. நினைவு சொல் செயல் ஆகிய முந்நிலைகளிலும் ஏமாறச் செய்தல் பசப்புதலாக வழங்குகின்றது. அந்தப் பசப்பெல்லாம் இங்கு வேகாது என்பது ஒரு மரபுத் தொடர். "வேகாது”