118
ஆ
இளங்குமரனார் தமிழ்வளம்
_
1
வயிரத்திற்குப் பட்டை தீட்டல் ஒளியூட்டுவதாம். சிலர் நல்ல ஆசிரியரை அல்லது பெருமக்களை அடுத்து அறிவன அறிந்து கொண்டால் அவரைப் பட்டை தீட்டப்பட்ட ஆள் எனப்பாராட்டல் உண்டு. இப்பட்டை ஒளியுடைமையாம். அறிவுடைமையைச் சுட்டுவதாம்
பட்டை போடல் - மதுக் குடித்தல்
பட்டை பதனீர் பருகும் குடையாகும். பட்டைகட்டல் பார்க்க. ஆனால்அப்பதனீர் பருகுதலைக் குறியாமல், அப் பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து வழங்குவதாயிற்று. இனிப் பட்டைபோட்டுக் காய்ச்சும் சாராயம் பட்டை எனப் படுவதால் அதனைக் குடித்தலையும், குறிக்கும். ‘போடல்’ என்பது உட்கொளல் பொருளது. 'வெற்றிலை போடல்’ 'வாயில் போடல்' என்பவற்றால் அப்பொருள் விளங்கும்.
படங்காட்டல்-பகட்டுதல் நடித்தல்
கடுமையாகக் காலமெல்லாம் உழைப்பவர் உழைக்கச் சிலர் குறித்த பொழுதில் வந்து தலைகாட்டி முன்னாக நின்று மேலலுவலர் பாராட் டப் பெற்று விடுவதுண்டு. அத் தகையரைப் “படங் காட்டுகிற ஆளுக்குத் தான் காலம்; என்ன உழைத்து என்ன பயன்” எனப் பிறர் வெளிப்படுத்தும் ஏக்க வுரையால் பகட்டுதல், நடித்தல் பொருள் விளங்கும்.
படங் காட்டினால் மயங்காதவர் உண்டா? குழந்தைகள் தானா, படங் காட்ட மயங்குகின்றனர்? எவ்வளவு பெரியவர்கள், படங்காட்ட மயங்கும் குழந்தை நிலையில் உள்ளனர்! படபடத்தல் - கோபப்படல்
க
வை
கால் படபடத்தல், கை படபடத்தல், நாடித்துடிப்பு, சொல் முதலியன படபடத்தல் வாய் உதடு துடிதுடித்தல் யெல்லாம் சீற்றத்தின் குறிகள் பித்தப் படபடப்பென ஒரு நோயுண்டு. அப்படபடப்பு மயக்கத்தை உண்டாக்கி வீழ்த்துவது. அதனினும் கொடுமையானது இப்படபடப்பு. ஏனெனில் சிலர் படபடப்பு குடும்பத்தையே கெடுத்ததுண்டு. சினம் சீற்றம் வெகுளி எனப் படபடத்து, குடியையே படபடக்க வைப்பர். படிதாண்டாமை - கற்புடைமை
படி என்பது வாயிற்படியைக் குறியாமல், ஒழுக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. இல்லையென்றால் படியைத் தாண்