வழக்குச் சொல் அகராதி
பதம்பார்த்தல் - ஆராய்தல்
121
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பழமொழி. ஒரு பொறுக்கை எடுத்து விரலால் நசுக்கி வெந்தது வேகாதது பார்ப்பது வழக்கம். அவ்வழக்கத்தில் இருந்து பதம் பார்த்தல் என்பது ஆராய்தல் பொருளில் வழங்குகின்றது "கொஞ்ச நேரம் பேசினால் போதும் அவர் பதம்பார்த்து விடுவார்” என்பர்.
பதவல் - கூட்டம்
.
பதம் என்பது பக்குவம், ஈரம், பருவம் எனப் பல பொருள் தரும் சால். பதவலாக இருக்கிறது' எனின் இன்னும் உலரப் போடவேண்டும் என்பர். ஆனால் இவற்றையன்றிக் கூட்டம் என்னும் பொருளிலும் பதவல் வழங்குகின்றது. ‘எறும்புப் பதவல்’ ‘ஈப் பதவல்' என்பனவற்றுடன் ‘பிள்ளை குட்டிப் பதவல்' என்பதும் வழக்காம். பதவல் என்பது கூட்டப் பொருளதாம். "குழந்தைப் பதவல் படுத்துகிற பாடு இவ்வளவு, அவ்வளவா?" என்னும் சலிப்பு பெரியவர்கள் வாக்கில் பெருக வழங்கும்.
பந்தல் - (சாவுக்) கொட்டகை
L
கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப் பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே திருமண விழாவுக்கென அமைக்கப்படுவது திருமணப் பந்தல். ஆனால் நகரத்தார் நாட்டில், பந்தல் என்பது இறப்பு வீட்டில் போடப்படுவது என்னும் வழக்குண்டு. திருமண வீட்டில் போடப்படுவது காவணம் எனப்படும். இறப்பு வீட்டுப் பந்தலில் வாழை முத லியவை நடுதலோ, தொங்கல் விடுதலோ இல்லை. சிறப்பு நிகழ்ச்சிப் பந்தலுக்கு இவையுண்டு. இதனைக் கொண்டே காவணம்’ என வேறுபடுத்திக் காட்டும் வழக்கு உண் டாயிற்றாம்.
L
பந்தாடுதல் - அடித்து நொறுக்குதல்
உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லா மலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப் பந்தாடுதல் அடித்து நொறுக்குதல் பொருளதாம். “சும்மா இருக்கிறேன் என்று நினைக்காதே; எழுந்தேன் உன்னைப் பந்தாடி விடுவேன்” என்று வீராப்புப் பேசுவோரும், பேசியபடி செய்வாரும் உளர். அப் பந்தாட்டக்