வழக்குச் சொல் அகராதி
பல்லைப் பிடித்துப் பார்த்தல் - ஆராய்தல்
123
மாடு பிடிப்பார் மாட்டின் அகவையைத் தெரிவதற்குப் பல்லைப் பிடித்துப் பார்ப்பர். அவ் வகையால் பல்லைப் பிடித் தல் ஆராய்தல் பொருள் பெற்றது. அதனால் ஒருவரைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் பலப்பலவற்றைக் கேட்டறிந்தாலும், நேரில் வினவியறியத் தலைப்பட்டாலும், “என்னையே பல்லைப் பிடித்துப் பார்க்கிறான்?” என இகழ்வது உண்டு.
L
“இலவசமாகக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்” எனவரும் பழமொழி விலையில்லாப் பொருளை 6 எத்தகையதாயினும் ஓரளவு பயன்படுமெனினும் கொள்க என்னும் பொருளில் வருவதாம்.
பல்லைப் பிடுங்கல் - அடக்குதல்
நச்சுப் பாம்புக்குப் பல்லில் நஞ்சுண்டு. அதனால் பாம் பாட்டிகள் அப் பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம் பாட்டுதலுக்குப் பயன்படுத்துவர். நச்சுப் பல் ஒழிந்த பல்லால் கடித்தால், அதனால் உயிர்க் கேடு வராது. ஆதலால் நச்சுப் பல்லைப் பிடுங்குதல் அதனை அடக்குவதாக அமைந்தது. அவ்வழக்கில் இருந்து பல்லைப் பிடுங்குதல் என்பது ஆற்றலைக் குறைத்து அடக்குதலைக் குறிப்பதாயிற்று. “அவன் பல்லைப் பிடுங்கியாயிற்று; இனி என்ன செய்வான்” என்பது வழக்குரை. பல்லைப்பிடுங்கல் செல்வம் வலிமை முதலியவற்றை அழித்து அடக்குதலாம். வாயைப் பிடுங்குதல் வேறு என்பதை ஆங்குக்
காண்க.
பலுகுதல் - பெருகுதல், கூடுதல்
பல்குதல் பெருகுதல் பொருளது, அது பலுகுதல் என்றும் வழங்கும். “ஒரே ஆடு வாங்கினோம் நன்றாகப் பலுகி நாலாண் டில் நாற்பது உருப்படிக்கு மேல் ஆகிவிட்டது ஆகிவிட்டது” என்பதில் பலுகுதல் என்பது பெருகுதல் பொருளில் வருதல் அறியலாம். பெருகுதல் கூடுதல்தானே, “வீடெல்லாம் எலி பலுகி விட்டது; பூனை வளர்த்தால்தான் சரிப்படும்” என்பதும் வழக்கே. ஆடு மாடுகள் கருக்கொள்ளல் பலப்படுதல் என்றும், குட்டி கன்று போடுதல் பலுகுதல் என்றும், பூவில் பலன் பிடித்தல் என்றும் வழங்கும் வழக்குகள் ஒப்பிட்டறியத் தக்கன.