வழக்குச் சொல் அகராதி
பளிச்சிடல் - புகழ் பெறல்
125
பள பளப்பு பளிச்சு என்பன ஒளிப் பொருள். பளிச்சிடும் ஒன்று கவர்ச்சி மிக்கதாகவும் மதிக்கத் தக்கதாகவும் அமை கின்றது. அவ்வகையால் பளிச்சிடலுக்குப் ‘புகழ்' என்னும் பொருள் உண்டாயிற்று. “அவர்கள் அப்பா பெயரைச் சொன் னால் பளிச்சென்று யாருக்கும் தெரியும்” என்பதில் பளிச்சிற்குப் புகழ் பொருள் உண்மை விளங்கும். இனிப்பளிச்சிடல் இல்லாப் புகழை இருப்பதாகக் காட்டுவதாக அல்லது போலிப்புகழாக அமைவதும் உண்டு. அது வெளிச்சம் போடல் எனப்படும். வெளிச்சம் காட்டுவதில் பெரிய ஆள் அவன்” என்பது அவ் வெளிச்சப் போலியை விளக்கும்.
பற்ற வைத்தல் - இல்லாததும் பொல்லாததும் சொல்லல்
அடுப்பைப் பற்ற வைத்தல் பழமையது. சுருட்டு, வெண் சுருட்டு, இலைச்சுருள் (பீடி) முதலியவற்றைப் பற்றவைப்பது புது நாகரிகப்பாடு. தொழில் துறையில் பற்றவைப்பது நாடறிந்த செய்தி. ஒன்றை ஒன்றில் பற்றுமாறு வைப்பதே பற்றவைப்பு. பற்றவைத்தது என்பது தெரியா வண்ணம் செய்ய வல்ல தேர்ச்சி மிக்கவர்களும் உளர். பற்றவைக்கும் அதனைப்போல ஒருவரைப் பற்றிய செய்தியை மற்றொருவரிடம் சென்று பற்றவைப்பாரும் உளர். அவர் தம் செயலும் பற்றவைத்தல் எனவே வழங்கும். “பற்றவைத்தது என்பது தெரிந்துகொள்ள முடியாமலே பற்ற வைப்பதில் தேர்ந்த ஆள்" எனப் பாராட்டுப் பெற விரும்புவாரும் உளர். ஆனால் அவருக்கும் தேர்ந்த ஒருவர் அவரைப் பற்ற வைக்கும்போது தான் அவர் செய்த செயற் கொடுமை உணர்வாரோ என்னவோ?
பற்றுப் போடல்- அடித்தல்
L
வீக்கம் உண்டானாலும், தலைவலி, பல்வலி போல வலி கண்டாலும் பற்றுப்போடல் இயற்கை. சொல்லியதைக் கேட் காத சிறுவர்களைப் பெரியவர்கள் அல்லது வேலை சொல் பவர்கள் “ஒழுங்காக வேலை பார்க்கிறாயா? பற்றுப் போட வைக்க வேண்டுமா?” என்பர். பற்றுப்போட வைத்தல் என்பது அடித்து வீக்கம் உண்டாக்குதலும், வலியுண்டாக்குதலும் நிகழும் என்பதாம். ஈ மொய்த்தல், பிடித்து விடல் என்பன காண்க. பறி-பொன், மீன் தெல்லி
பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி என்பர் என்பது இலக்கண உரைகளில் வரும் செய்தி. தொழில் வழி வழக்கு அது.