வழக்குச் சொல் அகராதி
127
பாக்கு வைத்தலாம். பாக்குவைத்தல் என்பது அழைப்புப் பொருள் தருதலானமையால், “உங்களைப் பாக்கு வைத்து அழைத்தேனா என்னும் பொருளில் “பாக்கா வைத்தேன்’ என்பது உண்டு. “அழையாமல் வந்துவிட்டு, அடாவடித்தனம் வேறா” என்பது போல் இழிவுறுத்தும் பொருளில் வழங்கு கின்றதாம்.
பாசம் - அன்பு, பற்று
பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப் பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் ‘தாய்ப் பாசம்' என்ப தால் புலப்படும். பாசம் - கட்டு, கட்டும் கயிறு என்னும் பொருள் களிலும் வழங்கும், ‘பாசக் கயிறு' என்பது இருசொல் ஒரு பொருள். கயிற்றால் கட்டுவது போல் அன்பாலும் ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை விளக்கும் சொல்லாட்சி இது. பாசம் சமய உலகில் பற்று என வழங்கும்; ‘பதி பசு பாசம் எனவரும் முப்பொருளுள் ஒன்றாதல் காண்க, பாசம் பற்று எதுவும் இல்லை என்பதும் வழக்கில் உள்ளதே. பாட்டுப் பாடுதல் வறுமையை விரித்துக் கூறுதல்
-
பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர் பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப் பாடுவதாகக் குறித்து வருகின்றதாம்.
பழம் புலவர்கள் பாடிய புறப்பாடல்களுள் சில வறுமைப் பாட்டாக வெளிப்பட்டு உள்ளது. வறுமையில் பஞ்சாகத் தாம் பறப்பதாகப் பிற்காலப் புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் உண்டு. அவ்வழக்குகளில் இருந்து பாட்டுப் பாடுதல் பஞ்சப் பாட்டுப் பாடுதல் என்பவை வறுமைப் பொருள் குறித்து வந்ததாகலாம்.
பாய்ச்சல் நடக்காது - சூழ்ச்சி நிறைவேறாது
விட்டு
ஆடுமாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலை, பாய்ச்சல் காட்டலாம். ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொள்ளவும் தீராப்பகையாய் முட்டிக் கொள்ளவும் செய்தலின் மாறா இன்பங் காணும் மனத்தர் அவர், அவர்தம் இயல்பைப் பாய்ச்சல் காட்டப் படுவாருள் எவரேனும் ஒருவர் தெளிந்து