148
இளங்குமரனார் தமிழ்வளம்
முட்டுமாடு - முன் சீற்றத்தன் (முன்கோபி)
―
1
முட்டும் மாட்டின் தலையசைவு, கொம்பசைவு கண்டே ஒதுங்கிவிடுவர். “கொம்புளதற்கு ஐந்து முழம்” விலக வேண்டும் என்பது ஒரு பாட்டு. கொம்புள்ள மாடு முட்டுதலுக்கு அஞ்சி ஒதுங்குவது போல முன் சீற்றத்தரைக் கண்டும் அஞ்சுதல் உண்டு. ஆதலால் அவரை முட்டுமாடு என்பர். அதனை அவர் முன்னர்க் கூற முடியுமா? அவர் காது கேட்கவும் கூற முடியுமா? பிறர்க்கு வெளிப்படாத வகையில் 'முட்டுமாடு' என்று பெயர் சூட்டிக் காள்வர். எத்தனை சிறப்புகள் இருப்பினும் முன் சினத்தர் நிலை மதிப்பைக் கெடுத்து விடுதல் வெளிப்படை. “கோபம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும்” என்பது ஒப்பேற்றிச் சொல்லாம்.
முட்டையிடல் - அடங்கிக் கிடத்தல்
அடைகாத்தல் என்பது போன்றது முட்டையிடல். முட்டைக்கோழி அடையை விட்டு வெளிப்படாது.தீனியும் நீரும் கூடக் கருதாமல் கிடந்த கிடையாய்க் கிடக்கும். அப்படிக் கிடத்தலையோ, தீனும் நீரும் கொள்ளாதிருத்தலையோ குறியாமல் வீட்டுள் அடைந்து கிடத்தலைக் குறிப்பதாக வழங்கு வது முட்டையிடலாம். முட்டையிட்ட கோழிபோல வீட்டை விட்டு வெளிப்போகாமல் கிடக்கிறான் என்பது பொருளாம். ‘அவன் முட்டைக்கோழி; விளையாட வரமாட்டான்’ தில் வீட்டுள் அடங்கிக் கிடக்கும் பொருளிருத்தல் அறிக. முடிச்சுப்போடல் - இல்லாததும் பொல்லாததும் கூறல்,
திருமணம் செய்தல்
என்ப
மூட்டி விடுதல், மாட்டி விடுதல் போல்வது இம் முடிச்சுப் போடுதல். ஒருவரோடு ஒருவருக்குச் சிக்கல் உண்டாக்கும் செயலில் ஈடுபடுதல் முடிச்சுப் போடலாகும். முடிச்சு அவிழ்க்க வல்லவரிடம், முடிச்சுப் போட முடியாத விழிப்பரிடம் முடிச் சாளர் வேலை நடைபெறாது. எங்களுக்கு முடிச்சுப் போடவா பார்க்கிறாய்? அந்தப் பாய்ச்சல் நடக்காது என்று முகத்தில் கரிபூசிவிடுவர்.
திருமணம் முடிச்சுப் போடுதல் என்பது தாலிகட்டல், கட்டுக் கழுத்தி, கட்டிக் கொள்ளல் என்பவற்றால் புலப்படும். “மூன்று முடிச்சுப் போடல்” என்பது முன்பொருளுக்கும் பின் பொருளுக்கும் தொடர்பில்லாது விளக்கிக் காட்டும்.