உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

159

வழுக்கி விழுந்தவர்கள் கடைத்தேறவென்றே அரும்பாடுபட்டார் முத்துலக்குமி அம்மையார். காந்தியடிகள் தம் தொண்டில் ஒரு பகுதி வழுக்கி விழுந்தவர் கடைத்தேற்றத்திற்கு உரிமை கொண்டது.

ஒருவர் வழுக்கினால், இன்னொருவரும் வழுக்குதலுக்கு

அடிப்படையாக இருந்திருக்க வேண்டுமே! அவரைத் தப்பவிட்ட வழுக்குதலே வழுக்குதலாம். “அவள் வழுக்கி விழுந்தவளாமே” எனப் பார்வை பார்ப்பது பரிவாக இருந்தால் நலம்! எரிவாக இருந்தால்? எய்தவன் இருக்க அம்பை நோவதாம் பழியே. வழுக்கி விழுதல், வழிதவறல், கைவிடல் என்பனவும் இச்சார்புடையனவே.

வழுக்கை - வழுக்கிக்கொண்டு செல்லல்

வழுக்கும் இடமும், வழுக்கும் பொருளும் வழுக்கையாம். முன்னது வரப்பு வழுக்கல்; பின்னது இளநீரில் வழுக்கை. தலை வழுக்கை வழுக்கையுமாம் மழுக்கையுமாம். முழுக்க வழித்தது மழுக்கை; மயிர் உதிர்ந்து முளைக்காதது வழுக்கை. வழுக்கைக் கல் போல, பொருள்போல அமைந்தது என உவமைப் பொருள தாம். இங்குக் காணும் வழுக்கை அப் பருப்பொருள் நீங்கிய நுண் பொருள் வழுக்கையாம்.

66

ஒன்றைச் சொன்னால் ‘ஆம்' என ஏற்காமல், ‘அன்று’ எனவும் மறுக்காமல் வழுக்கிக் கொண்டு போய்விடலாம். அவனே வழுக்கை; அவன் எப்படி எள்ளுக்காய் பிளந்தது போலத் தீர்த்து வைக்கப் போகிறான் என்னும் தெளிவு வழுக்கைப் பொருள் விளக்கும்.

வள்ளல் - கருமி

ல்லை என்னாமல் எல்லை இன்றி வழங்குவது வள் ளன்மை எனப்படும். நீயே என் கொடைப் பொருள் என ஒரு கோடு போட்டால் அக் கோட்டைக் கடந்து வரமாட்டானாம் பாரி. “வாரேன் என்னான் அவர் வரையன்னே" என்பது புறப் பாடல். அத்தகைய வள்ளன்மையைக் குறியாமல் அதற்கு எதி ரிடைப்பொருளையும் வள்ளல் என்பது தருதல் வழக்கில் உண்டு.

நீ பெரிய வள்ளல்; தெரியாதா? என்பதில் கருமி என்பது நீ வள்ளற் பொருளாம், “உன் வள்ளல் ஊரறியுமே” என்பது எள்ள லென எளிதில் புரியுமே. “நீ பிறந்ததால்தானே பாரி செத்தான் என்பது இனிக் கொடையால் புகழ்பெற முடியாதென இறந் தான் என்பதைக் குறித்துப் புகழ்வது போலப் பழிப்பதாம்.