உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

விருந்துதானே பேசப்படுகின்றன. சாப்பாட்டுப் பேச்சே சலிப் பிலாப் பேச்சாகப் பலர்க்கு இருத்தல் கண்கூடு. அவர்கள் சாப்பாட்டைப் பற்றிப் பேசுங்கால் அதில் மூழ்கி மூழ்கி முத் தெடுப்பது போலவே சுவைத்துப் பேசுவதும் ஒரு சுவையேயாம். விலாங்கு (மலங்கு) - ஏமாற்று

விலாங்கு ஒருவகை மீன். அது பார்வையில் மீன்போலவும் தோன்றும்; பாம்புபோலவும் தோன்றும். அதனால், விலாங்கைப் “பாம்புக்குத் தலையும்’ மீனுக்கு வாலும் காட்டும்" என்னும் நம்பிக்கை மக்களுக்கு உண்டாயிற்று. பாம்மையும் மீனையும், அவ்வவ்வினம் போலக் காட்டி ஏமாற்றும் என்பது கருத்தாம். அவ்வாறு ஆளுக்குத் தகப் பேசியும் நடித்தும் வாழுபவரை விலாங்கு என்பர். “அவன் ஒரு விலாங்கு; எங்கும் பிழைத்துக் கொள்வான்” என்பர். ஆளுக்குத்தகத் தன்னியல்பைக் காட்டுவது ஏமாற்றுவதுதானே!

விலைபோகாது - ஏற்கப்படாது

66

‘அந்தச் சரக்கெல்லாம் இங்கு விலைபோகாது அல்லது விலையாகாது" என்பது சொன்முறை. சரக்கு என்பதால் வணிகம் என்பதும், விலை என்பதால் கொடுக்கல் வாங்கல் என்பதும் தெளிவு. ஆனால் இவண் அப்பொருள் குறியாமல் சிலர் ஏய்ப் புரை ஏமாற்றுரை சிலரிடம் எடுபடுவது இல்லை. அவர்கள் ஏய்க்க வருவாரின் ஏய்ப்பை எளிதாய் எடைபோட வல்லவர், அதனால் அவர்களிடம் ஏமாற்றுதல் தோற்றுப் போகின்றதாம். விலைபோதல் - திறமையால் பெருமையடைதல்

திறமையான சிலர் எங்கே போனாலும் செல்வாக்குடன் விளங்குவர். அவரை 'விலைபோகின்ற சரக்கு அது’ எனப் பாராட்டுவர். நல்ல சரக்காக இருந்தால் தேடி வந்து வாங்கிக் கொள்வது போலத் திறமைக்கு எங்கும் மதிப்பிருக்கும் என்னும் தெளிவில் கூறும் உரை இதுவாம். நல்லமாடு உள்ளூரிலேயே விலைபோகும் என்பர். ஏனெனில் உழைப்பை நேரில் கண்டவர் கேட்கும் விலையைத் தந்து பிடித்துக் கொள்வர் என்பதாம். ஆதலால் விலை போதல் என்பது திறமைக்கு மதிப்புண்டு என்பதை விளக்கும் வழக்காகும்.

விழுந்து எழுதல் - வறுமைப்பட்டு வளமையாதல்

கீழே விழுதலும், விழுந்தவர் காலூன்றியும் கையூன்றியும் எழுதலும் வழக்கே. இவ்வழக்கில் இருந்து பொருள் நிலையில்