உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் 1

வெண்டைக்காய் - ‘வழவழா' வெனப்பேசல்

வெண்டைக்காய், வழு வழுப்புடையது. அத்தன்மை, அத்தன்மையையுடைய பேச்சுக்கு ஆகி வருதல் வழக்காயிற்று. யாராவது வழவழா எனப்பேசினால் “வெண்டைக்காய் நிறையப் பிடிக்குமா?” என்றோ, “விளக்கெண்ணெய் அளவுக்கு மேல் போட்டுவிட்டார்களோ?” என்றோ கேட்பது வழக்கம். “விளக் கெண்ணெய் விட்டு ஆக்கிய வெண்டைக்காய்க் குழம்பிலே தொட்டெழுதிய எழுத்து என்பது எவ்வளவு வழுவழுப்பு. ஆனால் அதனைப் புரட்சி, விறுவிறுப்பு நடைக்கு ஒருவர் சொன்னால் சொன்னவர் புரட்சிப் போக்கின் அழுத்தம் புல னாம்; அல்லது வெறுப்புணர்வு புலனாம்.

وو

வெந்நீரைக் காலில் விடல் - தங்காது புறப்படல்

வெந்நீர் வெதும்பிய நீர். அதனைத் தண்ணீர் போல் விட்டுக் கொண்டிருக்க முடியாது. குறைவாகவும் விரைவாகவும் வெந்நீரை விடுவதே வழக்கம். ஏன் வெந்நீர் விடுகின்றனர்? கட்டி, புண் உண்டாகியிருந்தால் கழுவவும், காய்ச்சியடிக்கவும் வெந் நீர் பயன்படுத்துவர். அதனை மொத்தமாக வைக்காமல் ஒற்றி ஒற்றி எடுப்பார். அவ்வழக்கில் இருந்து, விருந்தாக வந்தவர் ஆர அமர ல்லாமல் புறப்பட்டால் “எப்பொழுது வந்தாலும் வெந்நீரைக் காலில் விட்டுக் கொண்டு தான் வருவது” என்னும் வழக்கு உண்டாயிற்று.

வெள்ளென - விடிய

வெள் என என்பது வெளிச்சம் உண் ாக என்பதாம். காலையில் கதிரோன் எழுந்ததும் கப்பியிருந்த இருள் அகலு தலால் வெள்ளெனத் தோன்றும். அத்தோற்றத்தின் வெள் ளனல் வைகறைப் பொழுதைக் குறிப்பதாக வழக்கில் வந்தது. வெள்ளென வா” அப்பொழுதுதான் நாம் வேலையை முடித்து இருட்டுவதற்கு முன் திரும்ப முடியும் என்பதில் வெள்ளெனல் வைகறைப் பொழுதாம். வைகறை என்பதும் (வைகு அறை) கப்பிய இருளை அகற்றுதல் என்னும் பொருளதே.

வெள்ளை கள்

-

வெள்ளையடித்தல், வெள்ளை கொண்டு வரல், வெள்ளை யான ஆள், வெள்ளைச் சீலை என்பன வல்லாம் வெளிப் படைப் பொருளே. வெள், வெளிப்படை, வெள்ளி என்பனவும்