உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

173

விடல், கோள்மூட்டல் இன்னவெல்லாம் அவன் செய்யும் சிறுமைகளாம். “வெட்டிப் பயலைக் கட்டி அழுதாலும் வேகாரிப் பயலை ஒட்டக் கூடாது” என்பது வழக்குமொழி.

வேட்டி துண்டு கட்டல் - இறுதிக் கடன் கழித்தல்

வேட்டி துண்டு கட்டல் என்பது நீத்தார் கடனில் நிறை வாகச் செய்யப்படுவதாம். மகளிர்க்குக் கோடி போடுதல் என்பதும், ஆடவர்க்கு வேட்டி துண்டு கட்டுதல் என்பதும் வழக்கு.

பெண் கொண்டு கொடுத்தவர்கள் இதனைச் செய்வர். இழப்புக்கு ஆட்பட்டவர்களுக்கு மொட்டையடித்து நீராட்டி வேட்டி துண்டு கட்டுதல் வழக்கம். சில இடங்களில் தலையில் துண்டைக் கட்டுதல் உண்டு. அதனால் ‘லேஞ்சி கட்டு' என்றும் வழங்கப்படுகிறது. “லேஞ்சி” என்பது தலைப்பாகையாம். வேட்டை – வாய்ப்பு, வாய்ப்பாகக் கிடைத்தல், இன்பு

வேட்டையாடுவது ஆடுபவர்க்கு இன்புப் பொருளாக இருக்கலாம். ஆனால் ஆடப்படும் உயிர்க்குத் தீராத் துன்பாதல் வெளிப்படை. சுட்ட சுட்ட குறியெல்லாம் வாய்த்துவிட்டால் வேட்டையர் கொண்டாட்டத்தில் தலைகால் தெரிய தரியாமல் மகிழ்வர். அதில் இருந்து வேட்டை என்பதற்கு வாய்ப்புப் பொருளும் இன்புப் பொருளும் வாய்த்தன. வணிகர் செல்வம் ஈட்டுதல் வேட்டை! அரசியலார் பொருளீட்டல் பெரு வேட்டை! பதவியால் வேண்டியவெல்லாம் தேடிக் கொள்ளல் தனிவேட்டை! காமுகர் நினைத்தவை நிறைவேறல் கொள்ளை வேட்டை! இப்படி வேட்டைக் காடாகக் குமுகாயம் அமைவதும், அறிவுடையோரும் உணர்வுடையோரும் கூட வேட்டையராகத் திரிவதும் நல்ல அடையாளம் ஆகாது!