உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

3

வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றிபெரிதுடையேன். கழகப் பதிப்பில் காண்டற்கரியது அச்சுப் பிழை என்பது தமிழுலகம் அறிந்தது. ஆனால், இந்நூலில் அச்சுப் பிழைகள் பல நேர்ந்துள. இக்கருவி நூலைப் பயன்படுத்தும் திறவோர்க்கும் இப்பிழைகளைக் கண்டு கொள்ளவும் திருத்தம் பெறவும் இயல்பாக வாய்க்கக்கூடியவே. ஆதலால் பிழை பாட்டால் அன்னார்க்குப் பொருள் காண்பதில் இடர் ஏற்படாது என நம்புகின்றேன்!

பல்ல பல தமிழ்த்துறைகளில் படியச் செய்து, பயன் நூல்கள் படைக்கத் தூண்டித்துலக்கும், தண்டமிழ் அன்னையின் தளிரடியை வாழ்த்தி வணங்குகின்றேன்!

பாவாணர் ஆராய்ச்சி நூலகம், திருநகர், மதுரை - 6

625006.

தமிழ்த் தொண்டன், இரா. இளங்குமரன்.

26.11.89