உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

அடவியான்

இளங்குமரனார் தமிழ்வளம் 1

அடவி என்பது காடு. அடர்ந்து - செறிந்து அடர்ந்து செறிந்து - விளங்குவ தால் அடவி ஆயிற்று. வெளிப்படாமல் வீட்டுள் அடங்கிச் செறிந்து கிடப்பவனை அடவியான் என்பது வேலூர் வழக்கு. அடி கொடி

அடி என்பது வேர்; கொடி என்பது வேரில் இருந்து தளிர்த்துப் படரும் கொடி. கொடியாவது அடியின் முடி. அந்தாதி என்பதை அடி கொடி என்பது யாழ்ப்பாண வழக்கு; இயற்கையொடும் இணைந்த இனிய அமைப்பினது அது.

அடிப்பாவாடை

பாவாடைக்கு

அடிப்பாவாடை

உள்ளாக உடுத்திய

பாவாடையை

வாடை (உட்பாவாடை) என்பது குமரி வட்டார வழக்கு. அடி, மரம் செடி கொடிகளின் வேரும் தூருமாம் பகுதி. மண்ணுள் இருந்து வருவதால் ‘உள்’ என்னும் பொருள் கொண்டது. அடிப்பிடித்தல் என்பது சோறு குழம்பு ஆயவை கலத்துடன் ஒட்டிப் பிடித்தல் ஆகும் பற்று என்பது அது. அடி திரும்பல்

66

வி

அடி திரும்பும் வேளை என்பது காலடி நிழல் கிழக்கில் சாயும் பொழுது, அதாவது உச்சி சாய்ந்த மாலைப் பொழுது ஆகும். அடித்திரும்பி விட்டது; வீட்டுக்குப் போகலாம் என்பர். அடியைச் சார்ந்த நிழலைக் குறித்து, நேரம் குறிப்பது இது. இது தென்னக வழக்காகும்.

அடுக்குள்

சமையலறையை அடுக்குள் என்பது உண்டு. கலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்படுவதும், வீட்டின் உள்பகுதியாக இருப்பதும் கருதிய பெயர் அடுக்குள் ஆகும். இது பார்ப்பனர் வழக்கு.

அண்ணாக்கு

அண் என்பது மேல் என்னும் பொருளது. நாக்கின் மேலே ஒரு குறுநாக்கு இருப்பது எவரும் அறிந்தது. அது, அண்ணாக்கு எனப்படும். அதில் நீர் அல்லது குடிப்புப் படுமாறு தூக்கிக் குடித்தல் அண்ணாக்கக் குடித்தல் என வழங்கும். நாக்கைப் போல் வராமையாலும்

மேல்நாக்கு

வெளிப்பட