192
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
து
அப்பா ஆயி (அப்பாயி) என்பதும் உண்டு. அப்பச்சி என அப்பாவைக் குறித்தலும் சில குலப்பிரிவுகளில் உண்டு. முகவை வழக்கு. அம்பாரம்
கட்டை வண்டியின் சக்கரமட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது முகவை வழக்கு. அம்பரம் என்பது உயரம், வானம், அம்பரம்> அம்பாரம். உழவர் வழிச் சொல் இது. மாட்டுத் தீனியாம் படப்பையின் மேல் முகடு கூட்டுதலை அம்பாரம் என்பதும் வழக்கே. கூரைக்கு மேல் முகடு போடுதலும் அவ்வாறு வழங்கும்.
அம்மம்
பாலூட்டும் தாயின் மார்பு, அம்மம் எனப்படும். சிறு குழந்தையின் உணவு பாலாக இருத்தலால் அம்மம் என்பதற்குச் சோறு என்னும் பொருள் கொண்டது தஞ்சை வட்டம்.
வ
=
அம்மம் = பால். பாலூட்டலை அம்மம் ஊட்டல் என்பது நாலாயிரப்பனுவல். ‘அம்' என்பது மார்பை அமுக்கிப் பால் அருந்துதல் வழியாக உண்ட உண்டாகிய பெயர். அம் + அம் = அம்மம். அம் தருபவர் அம்மு, அம்மா, அம்மை என விரிவுறும். அம்மார்
மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை ‘அம்மார்’ என்பர். 'மார்' என்பது புளிய வளார், கருவேல் வளார், பனை நார், தென்னை நார், கற்றாழை நார் ஆகியவற்றைக் குறிக்கும். அவற்றுள் வளமான நல்ல நாரை எடுத்துக் கயிறாகத் திரிப்பதால் ‘அம்மார்' எனப்பட்டது.
அப்பி
தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப்புதுக்கடை வழக்கு ஆகும். அப்புதல் ஒட்டுதல். சேற்றை அப்புதல் சந்தனத்தை அப்புதல் போல்வது.
தாயை விடாமல் திரியும் இளமையான ஆட்டுக்குட்டி அப்புக் குட்டி எனப்படும். இன்னும், தாயில்லாமல் வேறொரு தாயாட்டில் விட்டுப் பால் குடிக்கச் செய்யும் ஆட்டுக்குட்டி அப்புக்குட்டி எனப்படுதலும் உண்டு.