ஆ
ஆ
சோறு; பண்டம்.
வாயைத் திறந்து இதனை வாங்கிக் கொள் என்பதை, ‘ஆவாங்கிக் கொள்' என்பது வழக்கு. ஆசொல்லு என்று சொல்வதும் வாயைத் திற என்பதற்கே யாம். ஆ வாயைத் திறத்தலையும், வாயைத் திறந்து உண்ணும் உணவையும் குறிப்ப தாயிற்று. இது மதுரை வட்டார வழக்கும் பொதுவழக்குமாம். ஆகம்
وو
66
66
ஆக்கம், நலப்பாடு என்பவற்றைக் குறிப்பது ஆகம். ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. ஆகமாக ஒருவேலை செய்ய மாட்ட ான் ஆகமாக எதையாவது செய்யேன் என்பவை வழக்கில் சொல்லப்படுவன. உருப்படியான - ஆக்கமான என்பது இதன் பொருளாம். இது முகவை வட்டார வழக்கு. ஆகியிருத்தல்
து
உண்டாகியிருத்தல் அல்லது கருக்கொண்டிருத்தல் என்பது பொதுவழக்கு. ஆகியிருப்பவள் ‘ஆய்' எனப் பட்டாள். ஆய் = தாய். தம் + ஆய் = தாய். வயிறுவாய்த்தல் என்பதும் அது. "கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே” என்பது நாலாயிரப் பனுவல்,
ஆட்சை
ஆளுகை, ஆளுமை என்னும் பொருளது ஆட்சை என்பது. ஞாயிறு திங்கள் முதலியவற்றின் கிழமை (உரிமை) பொருள் போல, ஆட்சை என்பதும் ஆளுரிமைப் பொருள தாகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. ஆட்சி > ஆட்சை.
ஆடை
உடை, பாலாடை, பன்னாடை
கோடை
பன்னாடை என்பவற்றைக் குறியாமல் எனக்காலப் பெயர் குறிப்பதாக மக்கள் வழக்கில் உள்ளது. இவ்விணைச் சொல்லில் வரும் ஆடை, 'கார்
ஆடை