206
இளங்குமரனார் தமிழ்வளம்
_
1
இடிகல்' என்பது குமரி வட்டார வழக்கு. கல் பின்னே இரும்பு, எல்லியம் ஆயவற்றால் ஆயது; உரல் உலக்கை ஒப்பவை அவை. இடிஞ்சில்
கிழிஞ்சில் போன்ற நீர்வாழ் உயிரி ஒன்றனை இடிஞ்சில் என்று வழங்குதல் தலைக்குளம் என்னும் வட்டார வழக்காகும். இடுதல் = சிறிதாக இருத்தல். க இப்பொருளால், கிழிஞ்சில் வகையில் அதற்குச் சிறிதாக உள்ளது இடிஞ்சில் என அறியலாம். இடுக்கான்
இடுக்கு என்பது நெருக்கம், சிறிது என்னும் பொருளது. கிழியஞ்சட்டியில் சிற்றளவினதாக இருப்பதை இடுக்கான் என வழங்குவது தலைக்குள வட்டார வழக்காகும்.
இடுவை
டு
று
என்பது நெருக்கம். சிறு என்னும் பொருளது. இடுக்கான தெருவையோ வழியையோ இடுவை என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும்.
இணுங்குதல்
ர
காதை அறுத்து விடுவேன் என்பதை, 'காதை இணுங்கி விடுவேன்' என வைவது தென்னக வழக்கு. மரத்தில் அல்லது செடி கொடியில் இருந்து ஓர் இலையைப் பறிப்பதை இணுங்குதல் என்பதும் வழக்கு. இலையை இணுக்கு என்பதும் உண்டு. பறிக்கப்பட்டது என்னும் பொருளது. துணிக்கப்பட்டது துண்டிக்கப்பட்டது துணுக்கு ஆவது போல. இணுங்கப்பட்டது இணுக்கு ஆயது.
இராப்பாடி
து
இரவுப் பொழுதில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று அவ்வீட்டுக்கு வரும் நல்லவை பொல்லவை இவை எனக் கூறிச் செல்லும் குறிகாரனை இராப்பாடி என்பது தென்னக வழக்காகும். இவ்வாறு இராப்பாடியாக வருபவர் சக்கம்மாள் என்றும் தாய்வழிபாட்டினராகிய கம்பளத்தார் (காம்பிலி தேயத்திருந்து வந்தவர்) ஆவர். அவர்கள் பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியர். இருசி
வயது வந்தது' என்றாலே பூப்படைந்தாள் என்பதன் பொருள் ஆகும். ஆனால் சிலர் வயது வந்தும் பூப்படையா