உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குடி

வட்டார வழக்குச் சொல் அகராதி

209

இளங்குடியை இரண்டாம் தாரம் என்பது பொது வழக்கு. இளைய குடியாள் என்பது வெளிப்படை.

.

உரிய பொழுதுகளில் அல்லாமல் ஊடு ஊடு உண்ணல் பருகல் என்பவற்றை இளங்குடி என்பது குமரி மாவட்ட வழக்கு. இளங்கொடி

சொல்லாகும்.

இளமையான கொடி என்னும் பொருளில் பொது வழக்குச் து கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடியை எங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும். இது தென்னக வழக்கு.

இறக்கம்

இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். ஏற்ற இறக்கம் என்பது முரண் இணைகள்.

உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் நட் ாலை வழக்காகும்.

குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது.

இறக்கான்

எலிவளைகள் பெரும்பாலும் நிலமட்டத்திற்குக் கீழாகவே இருக்கும். மேட்டிற்கு அல்லது நிலத்திற்கு அடியாக இறங்கலான இடத்தில் இருப்பதால் எலிவளைக்கு இறக்கான் என்னும் பெயரை வழங்குதல் கருங்கல் வட்டாரத்தில் உள்ளது.

இறுங்கு

பல்லின்

ஒரு

அதன்

பயர் ‘எயிறு’ என்பது. அடிப்பகுதியாகிய ஈறும் எயிறு எனவழங்கப்படும். கோட்டாறு வட்டாரத்தில் இறுங்கு என்பது ஈறு என்னும் பொருளில் வழங்குகிறது.

இறுங்கு என்பது கருஞ்சோளத்தின் பெயராதல் பொது வழக்கு. இறுங்குச் சோளம் என்பது கருஞ்சோளம்; வெள்ளைச் சோளம், முத்துச் சோளம், செஞ்சோளம் என்பவற்றின் வண்ணவகை.