உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம்

1

வும் அகராதிக்கு எப்படி ஆணவப் பொருள் வந்தது? அகராதி படித்தவன் சொல்லாற்றலுடன் ளங்கினான். அவனை வெல்லல் அரிதாக இருந்தது. அதனால் அகராதி படித்தவனோடு சொல்லாடலை விரும்பாமல் ஒதுங்கினர். பின்னர் அகராதி படித்தவன் என்பது அகராதி பிடித்தவனாக ஆகி ஆணவப் ஆ கி பொருளில் வழங்கலாயிற்று. அவன் பெரிய அகராதி எனப் பழிப்பாரும் உளர். பெருமைக்கு நேரிட்ட சிறுமை இது ! அகவிலை - மிகுவிலை

6

வி

அக்கம் என்பதற்குத் தவசம் என ஒரு பொருள் உண்டு. எப்பொருளினும் வாழ்வுக்கு அடிப்படைத் தேவையானது தவசம் ஆதலால் அத் தவசப் பயிர் பயிரிடுதலைக் குறைக்கவோ அத் தவச விலையைப் பெருக்கி அளவைக் குறைக்கவோ கூடாது என்பதால் ‘அக்கம் (அஃகம்) சுருக்கேல்' என்றனர். மற்றை மற்றைப் பொருள்களின் விலையை ‘அக்க விலை’ கொண்டே மதித்தனர். ஆதலால் ‘அஃக விலை’ ‘அக்கவிலை’ என வழங்கி அகவிலையாயிற்று. அவ்வக விலையும் தாறுமாறாக ஏறிய நிலையில் மிகு விலைப் பொருள் தருவதாயிற்று. இந்நாளில் D.A எனப்படும் பஞ்சப்படியை அகவிலைப் படி (Dearness Allowance) என வழங்குதல் நேரிதெனப் பாவாணர் குறித்தார். அருந்தற்படி என்பதும் அதுவே. அருந்தல் பொருள்விலை ஏற்றத்தால் வாங்குதற்கு அரிய தட்டுப்பாடு.

அச்சொடிதல்:

பெருஞ்தேசம் ஏற்படல்; பேரிழப்பு ஏற்படல்; ஆகிய வற்றால் எதிர்பாரா வகையில் சொத்தையெல்லாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டால் அச்சை ஒடித்து விட்டது என்றோ அச்சொடிந்து விட்டது என்றோ சொல்வது வழக்கம்.

வண்டியில் உள்ள ஓர் உறுப்பு அச்சு. அவ்வச்சு திரண்ட இரும்பால் ஆயது. அது ஒடிந்து விட்டால் ஒடிந்த இடத்தை விட்டு வண்டி நகராது. அதுபோல் ஒருவர் செயலொழிந்து போகுமாறு திடுமென்று ஏற்படும் பொருள் இழப்பு அச்சொடி தல் எனப்படும்.

அசப்பில் தெரிதல் - ஒரு பார்வையில் தெரிதல்

ஒருவரைப் போலவே ஒருவர் தோற்றம் அமைந்திருத்தல் உண்டு. அதிலும் கூர்ந்து நோக்காமல் மேலோட்டமாக நோக்கி னால், அவரைப் போலவே இவரும் தோன்றுவார். அத் தகையரை அவராகப்பார்த்து ஏதோ சொல்ல வாயெடுப்பர்.