உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

213

புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும். “உசுப்பிப் பார்த்தேன்; அசையாமல் கிடக்கின்றான்" என்பது ஏச்சு மொழி. "நாயை உசுப்பி விடு" என்பது ஆயர் வழக்கு. 'உசு உசு உசு உசு’ என்று நாயை ஏவுவதை, உசுக்காட்டுதல் என்பதும் பெருவழக்கே.

உடக்கு

சண்டை

டுவதை உடக்கு என்பது குமரி மாவ வழக்கு. உடற்றுதல் (போரிடுதல்) என்பது இலக்கிய வழக்கு. உடற்று என்பது உடக்கு என மக்கள் வழக்கில் உள்ளது.

உண்டுறுதி

நிலபுலங்களையோ குடியிருப்பிடத்தையோ போக்கிய மாக எழுதி வைப்பது உண்டு. ஒற்றி (ஒத்தி) என்பது அது. உரிய காலத்தில் உரிய தொகையை வழங்கி மீட்டுக் கொள்ளும் உரிமையது அது. அதனை உண்டுறுதி என்பது கம்பம் வட்டார வழக்கு. ஒற்றிக் கலம் என்பது கல்வெட்டு வழக்கு.

உண்டைக் கோல்

கவண், கவணை, கவட்டை என்பவை ஒருபொருள் சொற்கள். உருண்டையான கல் அல்லது உருட்டித் திரட்டிய மண் கொண்டு குறிவைத்து அடிக்கும் எய்கருவி அது. அதனை உண்டைக் கோல் என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு ஆகும்.

உணர்ந்தோர்

உலர்தல் என்பது காய்தல். உலர்தல் 'உணர்தல்' எனப் பொதுமக்கள் வழக்கில் உள்ளது. உலர்ந்து போன இஞ்சியைச் சுக்கு என்பது பொதுவழக்கு. அதனை உணர்ந்தோர் என்பது நெல்லை வட்டார வழக்காகும்.

உத்திகட்டல்

ரு

இது விளையாட்டில் கலந்து கொள்பவர்களை ள பிரிவாகப் பிரித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஒத்தவராகத் தேர்ந்து கொள்ளுதல் உத்திகட்டலாகும். உத்திக்கு உத்தி என்பது ஒப்புத் தரம் காட்டும். உழவுத் தொழிலில் உத்தி கட்டல் என்பது தண்ணீர் ஓடிப்பாய்ந்து பரவலாக நிற்பதற்குத் தக ஒப்புரவாக்கி வரப்புக் கட்டுதல் உத்திகட்டுதல் அல்லது உத்தி நிரட்டல் எனப்பதும். இது தென்னக வழக்கு.