உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

241

அமைந்த உயிர் வேலி ‘கட்டாப்பு' என வழங்கப்படுதல் கண்டமனுர் வட்டார வழக்காகும். பொதுவில் தென்னக வழக்குமாகும். கட்டு ஆர்ப்பு > கட்டாப்பு > நெருக்கமாகக் கட்டுதல்.

கட்டான்:

நரம்பு நார்

=

ஆகியவற்றால்

கட்டப்பட்டது

உடல்.

ஆதலால் யாக்கை (ஆக்கை) எனவழங்கும். யாத்தல், யாப்பு என்பவை கட்டு என்னும் பொருளன. கட்டான உடல் என்பதை விளங்கச் செய்வது எலும்பு ஆகும். எலும்பைக் கட்டான் என்பது மதுரை வழக்கு.

கட்டுக்கணி:

இயற்கையான முடி இல்லாதவர் செயற்கையாக முடி செய்து கட்டுதல் உண்டு. அச் செயற்கை முடியைக் கட்டுக்கணி என்பது கொங்கு நாட்டு வழக்கு. கட்டுக்கணி = ஒட்டு முடி. கணி = கண்ணி. தொடுக்கப்படும் கயிறு, மாலை ஆகியவை கண்ணி எனப்படும்.

=

கட்டு சீலை:

குளிசீலை என்பதும் தாய்ச்சீலை என்பதும் கோவணப் பொருளன. சீலை (சீரை) யில் இருந்து (கிழிந்த சீலையில் இருந்து) கிழித்து எடுக்கப்பட்ட துணியைக் கோவணமாகக் கொண்டதால் உண்டாகிய பெயர்கள் இவை. கோவணத்தைக் கட்டு சீலை என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும்.

கட்டை:

மரத்துண்டம், குட்டை என்பவற்றைக் குறிக்கும் கட்டை, பொதுவழக்குப் பொருளது. பொருளது. ஆனால் அது துறவர் வழக்கில் உடலைக் குறித்து வழங்கியது. “இந்தக் கட்டைக்கு இனி என்ன வேண்டும்? இந்தக் கட்டை சொல்கிறது” என்பர். இது பொதுமக்கள் வழக்கிலும் வழங்கலாயிற்று. 'உடல்' வேவதைக் ‘கட்டை’ வேகிறது என்பது அது.

கட்டைக் காலன்:

கட்டை > குட்டை

உயரக் குறைவு. கட்டைக்காலன் என்பது கால் உயரம் குறைந்தவனைக் குறித்தல் பொது வழக்கு. நெட்டைக் காலனுக்கு மாறு. ஆனால், கட்டைக்காலன் என்பதற்குப் பன்றி என்னும் பொருள் முகவை வழக்காக உள்ளது.

மாவட்