வட்டார வழக்குச் சொல் அகராதி
245
கண்ணி என்று வழங்கப்படுதல் வெற்றிலைக் கொடிக்கால் வழக்கமாகும்.
கண்ணுக்கடி:
பாம்பு கடித்தல், தேள்கடித்தல் என்பவை பாம்பு தீண்டுதல், தேள் கொட்டுதல் எனப்படும். கண்ணால் கடிப்பதுண்டா? பொறாமையால் பார்க்கும் பார்வையைக் கண்ணுக் கடி என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். வாயில்லாமல் செருப்பு கடிப்பது இல்லையா? பல் இல்லாமலே கண்ணின் கடியாகப் பொறாமை சொல்லப்படுகிறது.
கணிசம்:
அளந்து கொடுக்காமல் கண்ணால் அளவிட்டுத் தருவதைக் கணிசம் என்பர். இதற்கு ஏன் அளந்து கொண்டு; ஒரு கணிசமாகக் கொடுங்கள் என்பர். பின்னர் கையால் ஓர் அளவாகத் தருதல் கைக்கணிசம் எனப்பட்டது. கண்ணால் அளந்து தரும் அளவு கணிசம் ஆகும். இது நெல்லை வழக்கு. கத்து:
வ
கற்றவர் எழுதுவதும், கற்றவர் படிப்பதும் உள்ளமை யால் கடிதத்தைக் கற்று என்று வழங்கி, அது கத்து ஆகி யிருக்கலாம். குமரி மாவட்ட வழக்கில் கத்து, கடிதம் என்னும் பொருளில் வழங்குகின்றது.
கதம்பை:
தேங்காயின் மேல் அதன் பாதுகாப்புப் போல் நாரும், மட்டையும் உள்ளன. அவற்றில் நாரைக் கதம்பை என வழங்குதல் நாஞ்சில் நாட்டு வழக்கமாகும். கதம்பை என்பது வெப்பமானது, வெதுப்பம் தருவது என்னும் பொருளது.
கதிரை:
நான்கு காலுடையதை நாற்காலி என்பது போல் ஆறுகால் உடைய இருக்கைப் பலகையை அறுகாலி என்றார் பாவாணர். அறுகாலியைக் கதிரை என்பது யாழ்ப்பாண வழக்கும், தமிழகப் பரதவர் வழக்குமாகும்.
கந்து:
கட்டுத் தறியைக் கந்து (தூண்) என்பர். கட்டற்ற ஒன்றைக் கந்தழி என்பது பண்டை வழக்கு. ஒரு பெருந்துணி கிழிந்து