உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் 1

நீர் ஆகியவற்றையும் கருதுவது இல்லை. அடையைவிட்டு வெளிப்படவும் எளிதில் விரும்புவதில்லை. அடை கிடக்கத் தடையொன்று வருவதாயின் அதனை எதிர்த்துப் போரிடவும் துணியும். அவ்வடைகாக்கும் வழக்கத்தில் இருந்து, கிடந்த கிடப் ப்பை விட்டோ, வீட்டை விட்டோ வெளிப்படாமல் இருத்தல் என்னும் பொருள் அதற்குப் பிறந்தது. வீட்டை விட்டு வளிப் போகாத பிள்ளைகளை “ஏன் அடைகிடக்கிறாய்? வெளியே போய் வாயேன்” என்பது வழக்காயிற்று.

அடைத்துக் கொள்ளல் - இருமலமும் வெளிப்படாமை

வெளிப்படாமல் மூடிவைப்பதை அடைத்தல் என்பது வழக்கு, கதவடைப்பு, சிறையடைப்பு, தட்டியடைப்பு, பெட்டி யடைப்பு என்பவற்றைக் கருதுக.

ஒருவர் அடைக்காமல், தானே அடைத்துக் கொள்ளும் சிறுநீர்க் கட்டு, மலக்கட்டு என்பவையும் அடைத்துக் கொள்ள லாகக் கூறப்படும். முன்னும் பின்னும் அடைத்துக் கொண்டது என்பதும் வழக்கே. குருதியோட்டத் தடைப்பாடு, மூச்சோட்டத் தடைப்பாடு என்பனவும் அடைத்துக் கொள்ளல் எனவும் வழங்கும் ‘மார்படைப்பு நோய்' மிகப் பெருகிவருவது கண்கூடு. மார்பு அடைப்பு - மாரடைப்பு.

அம்போ என விடுதல் - தனித்துக் கைவிடல்

'அம்போ' என்பது அம்மோ, ஐயோ என்பன போலத் தனித்து அரற்றல், துணை என்று நின்றவன், தீரா இடை டையூறு அல்லது தாங்காத்துயர் நேர்ந்த காலையில் குறிப்பாகக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் ஒதுங்கிவிடுதல் (கைவிடுதல்) ‘அம்போ' என விடுதலாம்.

துணை என நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இல்லா திருந்தால், தன் நிலைக்கு ஏற்றவாறு செயலில் இறங்கியிருக்கக் கூடியவனை, நம்பிக்கையூட்டி உரிய இக்கட்டான பொழுதில் தனித்து விடுதல் ஒன்றுக்குப் பத்தாம் அல்லலை விளைக்கும் அன்றோ! அவ்விரங்கத் தக்க நிலையே ‘அம்போ’ அம்போ' எனக் கைவிடலாயிற்று.

அரவணைத்தல் - அன்பு சொரிதல்.

அரவு - பாம்பு, பாம்புகள் இணைந்து பின்னிக்கிடத்தல் அரவணைப்பு ஆகும். ஆனால், அப்பாம்பைப் குறியாமல் தாயும் சேயும், அன்பும் நண்பும் கொண்டாடுதல், போற்றுதல், அன்பு