உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

கொங்கு நாட்டு வழக்கு. சொல்லாலே நிகழ்நிலை காட்டும் செறிவுடைய சொல்லாட்சி இது.

கிடை:

6

-

ஆடு

நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும். யாகும். நிலத்தில் உரத்திற்காக ஆடுகளைக் கிடைபோடுதல் உழவர்கள் மாடு மேய்ப்பவர்கள் வழக்கமாகும். ஆட்டுக்கிடை போலவே மாட்டுக்கிடையும் உண்டு. கிடக்க வைப்பது என்பது கிடையாய், ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும். இது தென்னக வழக்கு.

கிண்ணுதல்:

கிண்ணுதல் என்பது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் விரைந்து ஓடுதலைக் குறிக்கும். "நின்றவன்தான்; எங்கோ கிண்ணி விட்டான்” என்பது வழக்கு. ஓட்டத்தில் கால் இடுப்பு ஆயவற்றின் கிண்ண மூட்டுகள் விரைந்து செயல் படுதல் வேண்டும். அச் செயல் குறித்து எழுந்த சொல் வழக்கு இதுவாம். இது முகவை, நெல்லை வழக்கு.

கிந்துதல்:

நொண்டி நடத்தலைக் கிந்துதல் என்பது நெல்லை முகவை வழக்கு. “என்ன கிந்திக் கிந்தி நடக்கிறாய்? காலில் அடிபட்டு விட்டதா? முள் தைத்து விட்டதா?” என்பர். கிண்ணுதலுக்கு எதிரிடை கிந்துதல் ஆயிற்றுப் போலும்.

கிள்ளுதல்;

விளையாட்டாகவும், தண்டிப்பாகவும் கிள்ளுதல் உண்டு. கிள்ளுதல் நகத்தால் கிள்ளுதல் (தோண்டுதல், வலிவரச் செய்தல்) கிள்ளி உண்பது கிள்ளை, கிளி. இங்கே கூறப்படும் கிள்ளுதல் கொடிக்கால் வழக்காகும். வெற்றிலை பறித்தலை அது குறிக்கும். கிள்ளி எடுக்கும் ஓலையும் ஓலைக் கடிதமும் கிள்ளாக்கு எனப்படுதல் கடந்த கால வழக்கு. திருப்பூர் வட்டார வழக்கில் இவ்வாட்சி மிக உள்ளது.

கிளிக்கால்:

கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக் காலும் என இருவகைக் குத்துக்கால்கள் உண்டு. அவற்றுள் மேற் குத்துக்காலை, கிளிக்கால் என்பது இறையூர் வட்டார வழக்கு. உவமை வழியால் ஆளப்பட்ட வழக்கு இது.