குறுக்கம்:
வட்டார வழக்குச் சொல் அகராதி
273
நீண்டும் அகன்றும் கிடக்கும் நிலப்பரப்பை அளந்து நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது ஏக்கர் என வழங்கப்பட்டது. 100 செண்டு ஓர் ஏக்கர் என்பது நில அளவைக் கணக்கு. இடுப்பைக் குறுக்கு என்பதை எண்ணினால் ணைமொழி
தெளிவாம். குறுக்கும் மறுக்கும் என்பது சிலுவையைக் (+) குறுக்கை என்றார் பாவாணர். குறுங்கட்டு:
•
நாகர்கோயில் வட்டாரத்தில் குறுங்கட்டு என்பது அமர் பலகை (பெஞ்சு) என்னும் பொருளிலும், பெருவிளை வட்டாரத்தில் நாற்காலி என்னும் பொருளிலும் வழங்குகின்றது. கட்டுதல் அமைந்தது கட்டு, குறுங்கட்டு என்பது குறுங்கட்டி எனப்படுவதும் உண்டு. கட்டில் அளவில் சிறியது என்பது குறிப்பது, குறுமை ஒட்டு.
குறும்பை:
குட்டையான ஓர் ஆட்டு வகை குறும்பை என வழங்கப் படுதல் பொது வழக்கு. ஆனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆட்டுக் குட்டியைக் குறும்பை என வழங்குகின்றனர். குறுமை, சிறுமைப் பொருள் முன்ஒட்டு; குட்டி குறுமான்; குறுநொய். குன்னி:
குன்னி என்பது சிறியது என்னும் பொருளது. குன்னியும் நன்னியும் என்பது இணைச்சொல். மலையில் சிறியது குன்று. குன்னி என்பது பேனின் முட்டையாகிய ஈர் என்பதைக் குறித்தல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். ஈர் சிறிதாதல் வெளிப்படை. குனித்தல்:
குனித்தல் வளைதல் பொருளது. குனிதல் வழியாக அமைந்தது கூன். கூனி என்பதொரு பட்டப் பெயர்; நீர்வாழி ஒன்றும் கூனி எனப்படும். கல்குளம் வட்டாரத்தில் குனித்தல் என்பது நடமிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. 'குனித்த புருவமும்” என்பது அப்பரடிகள் தேவாரம்.
66
கூட்டக்குரல்:
கூவுதல்,கூவிளி, கூக்குரல் கூப்பாடு என்பனவெல்லாம் கூவுதல் குரலெடுத்தல் வழியாக வழங்கும் வழக்குச் சொற்கள்.