உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூராப்பு:

வட்டார வழக்குச் சொல் அகராதி

275

மேகம் திரண்டு கூடிக் கவிந்து நிற்றலைக் கூராப்பு, என்பது முகவை, நெல்லை வழக்கு. 'கூர் ஆர்ப்பு' கூராப்பு ஆயது. கூர்தல் என்பது மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல். ஆர்த்தல், கட்டுதல். எ-டு: மாரார்ப்பு (மாராப்பு) செறிந்து நிற்கும் மழைமுகிலைக் கூராப்பு என்பது இலக்கிய நயமுடையது. கூரை வேய்தலையும் எண்ணலாம்.

கூழன்:

குட்டையான

6

பலாமரத்தைக்

குறும்பலா என்பர். இக் குறும்பலாவைக் கூழையன் குட்ட

“கூழைப் பலா" என்றார் ஒளவையார். குமரி மாவட்டத்தார் ‘கூழன்' என்பர். யானவன்; ‘கூழிக்கார்' என்பது இந்நாள் வழக்கு. கூறை நாடு:

=

கூறை நாடு என்பது ஊர்ப் பெயர். கொர நாடு என வழங்குகின்றது. கூறை என்பது மகளிர் கட்டும் சீலையுடை. அதனை நெய்தலைத் தொழிலாகக் கொண்ட ஊர் கூறை நாடு எனப்பட்டது. ஊருக்கு நாடு என்னும் பெயரும் உண்டு. எ-டு: ஆண்மறைநாடு என்பது ஊர்ப்பெயர். கூறை நாட்டுப் புடவை திருமணத்திற்குச் சிறப்பாகக் கொள்ளப்பட்டதால் கூறைப் புடவை என்பது கூறை நாட்டுப் புடவை என்பதுடன் திருமணப் புடவை என்னும் பொருளும் தருவதாயிற்று. கூறைச் சீலை என்பதும் அது.

கூறோடி:

நெல்லறுவடைக் காலத்தில் அறுக்கும் பரப்பை அளவிட்டு (கூறுவைத்து)த் தந்து அறுவடையை மேற்பார்க்கும் கண்காணியைக் கூறோடி என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும். கூறுவைத்தல் பிரித்துத் தருதல். அங்கும் இங்கும் சென்று கண்காணிப்பதால் ஓடி எனப்பட்டார். ஆளோடி, பாம்போடி என்பவை கிணற்றுச் சுற்றின் உள்வாய்த் திட்டு ஆகும்.

கூனிப்பானை:

கூனுதல் வளைதல். பெரியதாய் வளைந்ததாய் வளையப் பட்ட குதிர் (நெற்கூடு) என்பதைக் கூனிப் பானை என்பது பருவிளை வட்டார வழக்கு. பெரிய பானையை மிடாப் பானை என்பதை நோக்கலாம்.