உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

277

கை என்பது இரண்டு என்னும் பொருளில் செட்டிநாட்டில் வழங்குகின்றது. அது, கைவிரல் கருதாமல் கையிரண்டு கருதிய வழக்கு ஆகும்.

கைத்துப்போதல்:

ஈயம் இல்லாக் கலத்தில் வைக்கப்பட்ட புளிப்புப் பொருள் கைத்துப் போகும். கைத்தல் பதன் கெட்டுப் போதல் என்னும் பொருளில் கோவை முகவை மதுரை எனப் பல மாவட்ட வழக்குகளில் உண்டு. செவி கைப்பச் சொற்பொறுக்கும் என்பது வள்ளுவம்.

கைப்பாணி:

கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும். மட்டப் பலகை என்பது நெடியது; பூச்சுப் பலகை வட்டவடிவில் சுவர், தளம் ஆயவை தேய்க்கப் பயன்படுவது.

கைப்பிடி:

மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு. திருமணச் சடங்கில் மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தருதல் தொல் பழநாள் தொட்ட வழக்கு ஆதலால் கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. பிடித்துக் கொடுக்கும் 'கொடையே' திருமணம் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. நாகர்கோயில் வட்டாரத்திலும் இவ்வழக்குச் சொல் உண்டு.

கைபோடல்:

மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கை போடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு. அது விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது. கையின் மேல் துணியைப் போட்டுப் பிறர் அறியாவாறு விரல்குறி வழியாகக் குழூஉக் குறியாகப் பேசுவர். அவர்கள் விலைத் தொகையாகக் குறிப்பவை அவர்கள் மட்டுமே அறிந்து கொள்வதாக இருக்கும். பச்சை நோட்டு, கடுவாய் நோட்டு என்றால் நூறு உருபா ஆகும். கை மடக்கு:

6

கையூட்டு என்பது வெளிப்படு பொது வழக்கு. வாயில் ஊட்டுவது போல் கையில் ஊட்டுவது (இலஞ்சம்); இஞ்சக்கம் என்பது முகவை மாவட்ட வழக்கு).