286
கோக்கதவு:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
கதகதப்பாக இருப்பதற்கு அமைக்கப்படும் அடைப்பு கதவு ஆயது. மிகுவெப்பம், மிகுதட்பம் இல்லாமல் ஒரு நிலைப்பட உதவுவது அது. வீட்டில் பல கதவுகள் இருக்கும் ஆனால் தலைவாயில் கதவு பெரிதாகவும் (அகல நீளம் கூடியது) வேலைப்பாடு உடையதாகவும் இருக்கும். அதன் உயர்வு கருதி அதனைக் கோக்கதவு என வழங்குதல் நாகர் கோயில் வட்டார வழக்காகும்.
கோக்காலி:
இயல்பான உயரம் அமைந்த நாற்காலியினும் உயர மான கால்களையுடைய நாற்காலி அமைப்பைக் கோக்காலி என்பது தமிழகப் பொதுவழக்காகும். கோ என்பதற்கு உயரப் பொருள் காள்ள கோபுரம்’ துணையாகிறது. அரசன் நகராக இருந்ததுடன், "மாநகர்க்குக் கோபுரம்" என்னும் உயர்வும் காட்டுவது அது. கோவேறு கழுதை மற்றைக் கழுதையினும் உயரமாதல் வெளிப்படை.
கோங்கமார்:
கோங்கு ஆகிய தோட்டி (தொரட்டி) கொண்டு ஆடு மேய்க்கும் ஆயரைக் கோங்கமார் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். கோங்கறை காண்க.
என
கோ> கோன்> கோனார்> கோனாக்கமார்> கோங்கமார்
வரலாம் எனினும் கோங்கு என்பதற்குப் பொருள் உண்டாகலின் அது கொள்ளப்பட்டது.
கோங்கறை:
நீண்டுள்ள கம்பில் அல்லது கழையில் கட்டிய அறுவாளை யுடையது கோங்கறை; அது தோட்டி. அறை = அறுக்கப் பட்டது; அறுப்பது. கோங்கு = நீண்டது. ஒரு மரத்தின் பெயர் கோங்கு. நெடிது வளர்வதால் பெற்ற பெயர் அது. கோங்கறை குமரி வட்டார வழக்குச் சொல். கோங்கு + அறை = கோங்கறை. கோச்சை:
சண்டைக்குப் பயிற்சி செய்து சேவற் போர் செய்யும் சேவலைக் கோச்சை என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு. கோ = தலைமை, உயர்வு, உயரம் முதலாய பொருள் தரும் சொல். கோபுரம், கோங்கு என்பவை அறிக.