உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தம்:

வட்டார வழக்குச் சொல் அகராதி

293

சந்தம் என்பது இசை. சந்தப்பாடல் ஒருவகை. இங்கே சொல்லப் படும் சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது. தளிரின் நிறமும் மென்மையும் கவர்ச்சிமிக்கவை. மாநிறம் என்பது மாந்தளிர் நிறமாகும். “பல்லவத்தின் (தளிரின்) சந்தம் (அழகு) மடிய (அழிய) வடிவால் மருட்டிய தாழ்குழலே” என்பது யாப்பருங்கலக் காரிகையில் கடவுள் வாழ்த்துப் பாட்டு அரிய இலக்கிய இலக்கிய ஆட்சியும், எளிமையாக மக்களாட்சியில் டம் பெறும் என்பதன் சான்றுகளுள் ஒன்று சந்தம்.

சபைக் கிருத்தல்:

அவை > சவை > சபை; சபைக்கு இருத்தல் என்பது ஊரவை கூடியுள்ள போது; அவையில் கால்மடக்கி அமரும் நிலை சபைக்கு இருத்தல் ஆகும். கால்மேல் கால் போட்டு இருத்தலோ குத்துக் கால் போல் நட்டுக்காலில் இருத்தலோ, கால் பின்மடிப்பாகி இருத்தலோ இல்லாமல் சம்மணம் கூட்டி இருப்பதாகும். தவநிலை இருக்கையாகச் சமணத் துறவர் (சிரமணர்) இருக்கும் நிலை சம்மணம் ஆகும். கடுந் துறவறம் திகம்பரர் (திக்கு ஆடையர்) போல் உடையின்றி இருத்தல் அம்மணம் என்பதாம் அமணர் (சமணர்) சபைக் கிருத்தல் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு.

சம்பந்தி:

கிளை என்பதும் உறவு என்பதும் கொடுப்பவர் உறவுப் பெயராகவும் கேள் என்பதும் உற்றார் என்பதும் கொள்பவர் உறவுப் பெயராகவும் இருந்தநாள் உண்டு. கேள், உற்றார் என்பவை தந்தை வழியர். கிளை, உறவு என்பவை தாய் வழியர் உறவுப் பெயர். இவை மாறிப் பொதுமையாயன. சம்பந்தி என்னும் வேற்றுச் சொல் அவ் விடத்தைப் பற்றிக் கொண்டது. சம்பந்தி என்பது உறவுப் பெயராக இல்லாமல், ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒன்றாகும் ‘துவையல்' என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது.

சம்பல்: (1)

சம்பல் என்பது விலை குறைதல் என்னும் பொருளில் வ வழங்கும் தென்னக வணிக வழக்குச் சொல். “வற்றல் விலை சம்பல்”; "வெங்காய விலை சம்பல்” என்பர். பொருள்