296
சவத்தல்:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
ஈரப்பதமாக இருப்பதைச் சவத்தல் என்பது அறந் தாங்கி வட்டார வழக்கு. ஈரப்பதமாக இருப்பது விரைவில் கெட்டுப் ர போகுமாதலால் அதனை விலை குறைத்து மலிவாக விற்பர். ஆதலால் சவத்தல் என்பதற்கு மலிவு என்னும் பொருள் மதுரை வட்டாரத்தில் உண்டு. சவத்தல் என்பது போலவே பதத்தல் என்பது ஈரப்பதம் குறித்தல் பொது வழக்காகும். மழையால் பதப்பட்டுப் போனது என்பர்.
சவர்:
சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங் கோடு வட்டாரவழக்காக உள்ளது. சவர் சவல் > சவள் > சவடு. சவண்டு போய்க் கிடப்பதும் வளைந்து வளைந்து செல்வதுமாம் பாம்பைச் சவர் என்பது சவள் என்பதன் வழிவந்ததே யாம். சவட்டுதல் காண்க.
சன்னம்:
பொன்வேலை செய்வார் பொற்பொடியைச் சன்னம் என்பர். பொடி அல்லது தூள் என்னும் சிறுமைப் பொருள் தருவது அது, குறையோ முயற்சி இன்மையோ இருந்தால் சன்னம் சன்னமாகச் சரியாகிவிடும் என்பது நெல்லை, முகவை வழக்காகும். சிறிது சிறிதாக என்பதே அதன் பொருளாம்.
சாக்கோட்டி:
கருக் கொண்ட மகளிர் தலை சுற்றலும் வாந்தியுமாக இருக்கும் நிலையை ‘மசக்கை' என்பது பெருவழக்கு. இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர். நாவறட்சி, தலைசுற்று, கண்மயக்கு, நிற்கமுடியாமை ஆகியவை கண்டு அவலமாக இருக்கும் நிலையை இவ்வாறு வழங்கு கின்றனர் எனலாம்.
சாங்கியம்:
சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்னகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது. சாங்கியம் பெரும் பாலும் மகளிர் முன்னின்று செய்யும் சடங்கையே ஆகும். சடங்கியம் என்பது சாங்கியம் என்றாகியது எனலாம். இனி, அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது. சடங்குகளில் வழிவழியாகச்
ச