இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
316
இளங்குமரனார் தமிழ்வளம்
_
1
வேலை செய்ய முடியாமையால் சோதா என்பது ஒன்றுக்கும் ஆகாத சோம்பேறி என்னும் பொருள்படுவதாயிற்று. சோதாக் கடா என்றும் கூறுவர். இது முகவை நெல்லை வழக்கு.
சோழக் கொண்டல்:
சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச் சோழக் கொண்டல் என்பது நெல்லை நாட்டு வழக்காகும். வட கிழக்குப் பருவக் காற்றைக் குறிப்பது அது. கொண்டல் நீர் கொண்டு வரும் மேகம்.
ஞாறு:
ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங் கோடு வட்டார வழக்காக உள்ளது. நாறு என்பது நாற்று. எ-டு: ஞான் > நான்; ஞாறு> நாறு.
ஞாறு என்பது தொல்பழ வழக்கு. யாறு ஆறு; யானை > னை என்பவை போல. நாறுதல் முளைத்தல்.
ஆனை
=