தீயாட்டு:
வட்டார வழக்குச் சொல் அகராதி
331
துணியைப் பந்தாகச் சுருட்டி எண்ணெயில் ஊற வைத்துத் தீமூட்டிச் சுழற்றுதல் சூ(ழ்)ந்து எனப்படுதல் பொது வழக்கு. அதனைத் தீயாட்டு என்பது குற்றால வழக்கு. தீப்பந்தம் கொண்டு சுற்றி ஆடுதலால் பெற்ற பெயர் இது.
தீற்றி:
திற்றுதல்
=
தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின்> தீன்> தீனி போல. உணவைத் தீற்றி என்பது இலவுவிளை வட்டார வழக்கு. துற்றுதல் என்பதும் தின்னுதல் பொருளில் வரும். துற்றுதல்> திற்றுதல்> தீற்றி. துக்காணி:
துண்டு துக்காணி,” என்றும் ‘துட்டு துக்காணி' என்றும்; வழங்கும் இணைச் சொல்லுள் ஒன்று துக்காணி. துண்டு என்பதனினும் சிறிது துக்காணி என்பதாம். துக்கடி என்பது நில அளவைப் பெயர்களுள் ஒன்று. மிகச்சிறிய நிலப்பரப்பு. முகவை, நெல்லை வழக்கு இது. துண்டம்:
66
ஒரு பெரும் பொருளைப் பகுத்துத் துண்டு போடுவது துண்டு என்றும் துண்டம் என்றும் வழங்கப்பெறும். 'துண்டு துண்டாக' ஆக்கு என்பது ஏவல். 'துண்டம் துண்டம் செயும் அரி” என்பார் அருணகிரியார். துண்டம் என்பது ஆட்டுத் தரகர் வழக்கில் 60 ஆடுகளைக் குறிப்பதாக வழங்குகின்றது. துணித்து:
துணித்து என்பதற்குத் துண்டாக்கி என்பது பொதுப் பொருள். துணிக்கப்பட்ட துண்டுக்குத் துணித்து என்பது குமரி வட்டார வழக்கு. தனித்தாக அமைந்தது தனித்து என்றும், தனியன் என்றும் வழங்கப்படும் வழக்குப் போல்வது இது.
துப்பு:
ப
‘துப்புக்கெட்டவன்' என்பது ‘அறிவு கெட்டவன்' என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. துப்பு வலிமை; அது துய்க்கும் உணவால் உண்டாவது பற்றிய ஆட்சி. அறிவு கெட்டவன் என்பது, 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்பதன் வழியதாகலாம். மானம், தவம், குலம், கல்வி எனப் பலவும் பசிவந்திடப் போம் என்பதொரு தனிப்பாடல்.