உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

என்பது திண்டு போன்ற பாறை; சான்று திண்டுக்கல். திண்டு தெண்டு. தெண்டில் இருப்பது தெண்டல் என விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. தெண்டல், பச்சோந்தி.

தெம்பாளி:

=

திட மானவர் என்பதைத் ‘தெம்பாளி' என்பது தென்னக வழக்கு. தெம்பு + ஆளி. தெம்பு திடம். தெம்மாடி என்பது இதற்கு மாறான சொல். தெம்பு அற்றவர் என்னும் பொருளது. தெம்பு ஆடிப்போனவன்(ர், ள்) தெம்மாடியாம்.

தெரிப்பு:

காதில் குழந்தைப் பருவத்தில் அணியும் அணிகளுள் ஒன்று தெரிப்பு. அது, ஒரு குண்டு, சுரை, ஓடாணி என்னும் மூன்று பிரிவுகளையுடைய சிறிய அணிகலமாகும். சற்றே வயது வந்ததும் தெரிப்பைக் கழற்றிக் கடுக்கன் போடுவர். தெரிப்புக்கு முன்னே அணியப்படுவது வாளி எனப்படும் வளையம் ஆகும். வை தென்னக வழக்கு.

தெரிப்புக் கட்டுதல்:

மாரியம்மன் வழிபாட்டில் பூக்குழி இறங்குதல் என்பது ஒன்று. தீயையும் பூவாக எண்ணி இறங்குவது அது. அதற்கு நோன்பு கொண்டு கயிறு கட்டுதல் வழக்கமாதலால், பூக்குழி இறங்குதல் தெரிப்புக் கட்டுதல் என மேலூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. காதில் போடும் அணி ஒன்று தெரிப்பு. காது குத்தி முதற்கண் போடும் சிறு காதணி. அதனைக் குத்தத் தக்க இடம் தேர்ந்து குத்துதல் பற்றி வந்த பெயர். தெரிப்பு, நெல்லை, முகவை வழக்குகள்.

தெல்லி:

மீன்பிடி கூடையைத் தெல்லி என்பது நெல்லை வழக்கு. உருண்டைச் சுரைக்காய் போன்ற வட்ட வடிவினது அது. மீன் ஒழுகிப் போகாமல் நீர் ஒழுகிப் போகும் அமைப்பினது. இல்லி, என்பது ஓட்டை. இல்லிக்குடம் = ஓட்டைக் குடம் (நன்னூல்). கேட்டதைக் கேட்டவுடன் போகவிடும் மாணவன் இயல்புக்கு உவமையாவது அது. இல்லி > தெல்லி ஆயது தகரப்பேறு ஆகும். தெல்லிச்சட்டி:

தெல்லி ஓட்டை என்னும் பொருள் தருவது தெல்லியில் சொல்லப்பட்டது. தெல்லி = துளை, கண். துளைச் சட்டி, கண்