342
தொப்பை:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
தொப்பி உருண்டைப் பொருள் தருவது போல உருட்டப் பட்ட சாண உருண்டையைத் தொப்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை என்பது திரண்ட வயிறு (தொந்தி) என்னும் பொருள் தருவது பொது வழக்கு. தொம்பை:
உ
நெல் கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல, உவமை வகையால் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம். நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர். தொம்பையா எனப் பெயரும் உண்டு. பெருவயிறர் என்னும் பொருளில் பிள்ளையாரைக் குறிப்பது அது. தொழுக்கு:
L
தொம்> தொம்பு> தொமுக்கு. தொமுக்கு என்பது வயிறு பெருத்து ஓங்கு தாங்காக இருப்பவரைத் தொமுக்கு என்பது திருப்பூர் வட்டார வழக்கு. அத்தகையவரைத் ‘தொமுக்கடா’ என்பது நெல்லை வழக்கு. தொமுக்கு பெரியது, பருத்தது.
தொயில்:
=
பழ நாளில் மகளிர் மார்பில் எழுதப்படும் தொய்யில் என்பது இலைச்சாறு - பச்சிலைச் சாறு -கொண்டு எழுதப் பட்டதாம். அதற்குப் பயன்பட்ட கீரைப் பெயர் சாறு மிக்க தொயில் கீரை என்பதாம். அக் கீரை அதனை நினைவூட்டும் வகையில் இன்றும் முகவை மாவட்ட வழக்கத்தில் உள்ளது. தொரட்டு
உன்னோட தொரட்டுத்தான் எப்போதும்' என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு ‘தொரட்டு' எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை என உவமை வழக்கு ஆகும்.
தொலித்தல்:
தொலித்தல் என்பது தோலை நீக்குதல் என்னும் பொருளதாம். தொலி என்பது தோல். தோலை நீக்குதல் தொலிப்பு. இவற்றால் தொலித்தல் என்பது உரித்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பழனி வட்டார வழக்குமாம்.