வட்டார வழக்குச் சொல் அகராதி
351
வட்டார வழக்கு. நீண்டு இழுத்துக் கயிறாக்க உதவும் தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது. அது வழுக்கி விட்டு நீளச் செய்தல் பற்றியதாகலாம். நெடுகல்:
நெடுகல் என்பது தொடர்ந்து, நாள்தோறும் என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காக உள்ளது. நெடுமை (நீளல்) வழிப்பட்டது அது. "நெடுகலும் இப்படியே செய்தால் ஒருவேளை இல்லாமல் ஒருவேளை அகப்பட்டுக்
கொள்வாய்” என்பர்.
நெடுப்பம்:
நெடுப்பம் என்பது நீளம் என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. "நிலம் நெடுப்பமாக இருப்பதால் வாய்க்காலும் வரப்புமாகவே போய்விட்டது” என்பது வழக்கு. நெடுவாலி:
உடும்பு என்னும் ஊர் உயிரியை நெடுவாலி என்பது குமரி வட்டார வழக்கு. உடும்பின் வால் நீளமும் வலிமையும் கருதிய பெயர் அது. உடு என்பது வளைவு. வாலை எடுத்து உடும்பின் வாயில் தந்து விட்டால் சக்கரம் போலக் கிடக்கும். வாயில் இருந்து வாலையும் எடாது. ஐந்தாறு உடும்புகளைக் கோலில் போட்டு, தோளில் கொண்டு வருவர். உடும்புப் பிடி தன்வாய் அயல்வாய் என்பதும் தெரியாத பிடி என்பது வியப்பாம். நெல்லுச் சேர்:
த
நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை, நெல்லுச் சேர் என்பது நாகர்கோயிலொடும் ஒன்றிய புத்தனேரி வழக்காகும். சேர்க்கத் தக்க இடம் சேர் ஆயது.
நெளிப்பான்:
ஆடல் என்றால் உடல் கால், கை, விரல், கழுத்து, கண் என்பனவெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஆடல்=கூத்து, நட்டுவம்.