உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

353

இருக்கிறது; பார்த்து வண்டியை ஓட்டு என்பது பெரியவர்கள் இளையவர்க்குக் கூறும் அறிவுரை.

நொய்யல்:

பல சிறிய ஆறுகள் ஓடைகள் கள் சேர்கின்றன. ஆறு பெருகுகிறது; பேராறு ஆகிறது. பேராற்றின் பயன் என்ன? அ ணகள், கால்கள் அமைகின்றன. வேளாண்மைப் பயன் குடிநீர்ப் பயன் ஆகியவை ஆகி அளவால் சுருங்கிச் சிறுகி ஓடு கின்றது. அரிசியில் குறுநொய்யும், நொய்யும் உள்ளமை போலச் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர். கோவையார் கொண்டதும் கண்டதுமாம் ஆறு நொய்யலாறு.

நொய்யினிப்பு:

இரவை என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ‘ரவாலாடு’ என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது ரவை இலட்டுகம் குறிப்பதாம்.