வட்டார வழக்குச் சொல் அகராதி
357
வொலிக் குறிப்பைக் கருதிப் ‘படக்கு' என்பது குமரி மாவட்ட வழக்காகும்.
படலை:
படலை என்பது சீப்பு என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார ர வழக்காக உள்ளது. முடி காற்றில் எழும்பாமல் படிவாக இருக்க மகளிர் தம் கூந்தலில் சீப்பைச் சொருகுதல் வழக்கம். அவ் வழக்கத்தில் இருந்த படலை என்பது ஏற்பட்டிருக்கும். படர்ந்து அமைந்தது, படலை.
L
படித்தம்:
படிப்பு என்பது கல்வி கற்பதைக் குறிக்கும். அது பொது வழக்கு. குமரி மாவட்டத்தில் கல்வி கற்பதைப் படித்தம் என்கின்றனர். படி என்பது வகுப்பு என்னும் பொருளில் 6 ஆம் படி, 7 ஆம் படி என்பது நெல்லை வழக்கு. படித்தல் படித்தம் எனப்படுதல் சொல்லியல் முறையேயாம். பிடித்தல் பிடித்தம் ஆவது போல்.
படிப்புரை:
படி என்பது வாயில் நுழைவில் இருப்பது. அதற்கு இருபாலும் திண்ணை அமைப்பது பெருவழக்கு. குடிசை வீடு எனினும்கூட அவ் வழக்கம் சிற்றூர்களில் உண்டு. படியின் உயரத்தைக் கொண்டு அதற்கு மேலே உயர்த்திப் போடுவதே திண்ணை அமைப்பாகும். புரை என்பது உயர்வு என்னும் பொருளமைந்த பழஞ்சொல். “புரை உயர்வாகும்” என்பது தொல்காப்பியம். அப் படி வடிவு மாறாத வட்டார வழக்கு படிப்புரை என்பதாம். இது கல்குள வட்டார வழக்கு. ஒட்டுத் திண்ணை என்பது பொருள்.
படிவால்:
கால், வால் என்பவை நெடுமை (நீளம்) என்னும் பொருள் தரும் சொற்கள். படிவால் என்பது நீர் ஓடிச் செல்லும் ஓடுகால் ஆகிய ஓடையைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. படிதல் பள்ளமாக அமைதல்.
படுக்கை:
தெய்வத்திற்கு இடும் படையல் வகையுள் ஒன்றாகச் சீர்காழி வட்டாரத்தில் படுக்கை என்பது வழங்குகின்றது. படுக்கை என்பது புலால் கலவாத படை படையல்
என்பதாம்.