உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

359

எ-டு:வெங்காயப் பண்டடை பறித்தவுடன் விற்றால் விலை, வேண்டு மளவு கிட்டாது என்பதால் இருப்பு வைத்து விலை கூடும்போது விற்பது உழவர் வழக்கம். அதற்குப் பண் டை போடுதல் நெல்லை, முகவை வழக்கு. ‘பண்டக சாலை' மூலம் அது.

பண்டுவர்:

பண்டுவம், பண்டுவர் என்னும் சொற்களை மிகுதியாக ஆட்சிக்குக் கொண்டு வந்தார் பாவாணர். வந்தார் பாவாணர். பண்டுவர் என்பது மருத்துவர் எனவும், பண்டுவம் என்பது மருத்துவம் எனவும் பொருள் கொண்டு குமரி மாவட்ட வழக்கில் உள்ளது.

பத்தடப்பு:

பிரிந்து போன இருவரை அல்லது இரு கூட்ட டங்களை ணைத்து வப்பது பத்தடப்பு என மதுக்கூர் வட்ட வட்டார வழக்காக உள்ளது. பத்து அடப்பு என்பவை பற்று அடைப்பு என்பதாம். ஒன்றோடு ஒன்றைப் பொருத்தி வைப்பது பற்ற வைப்பது ஆகும். அப் பொருளில் பொருந்தச் செய்தலாகப் பத்தடப்பு வழங்குகின்றது. ஒப்படைப்பு என்பதில் உள்ள அடைப்பு அடைத்தல் பொருளது.

பத்தல்:

இறை கிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால் பத்தல் எனப்படல் பொது வழக்கு. பனையின் அடிமட்டை பத்தல் எனப்படுதல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். பத்தல் அமைப்பும் பனை மட்டை அடியமைப்பும் கொண்ட ஒப்புமைப் பெயரீடு இஃதாம்.

பத்தல் மடை:

கிணற்றில் கமலை பூட்டி இறைத்து எடுக்கும் நீர் பத்தல் வழியாக வந்து, மடையில் பாய்ந்து வெளிப்படும் பத்தல் மடை என்பவற்றை இணைத்த சொல் பத்தல் மடை இப் பெயரொடு கூடிய ஊர் நெல்லை மாவட்டத்தில் உண்டு. அது குளத்துப் பத்தல் மடையாகும். ஊமத்தை என்னும் (ஊவும் மத்தும் இணைந்தமை போன்ற) சொல்லமைதி இது. பன்றிக்கு உணவு வைக்கும் ஏனம் பன்றிப் பத்தலாம்.

பதப்பு:

தலையின் உச்சியில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பள்ளம் உண்டு. குழந்தை நிலையில் அப்பள்ளம் நன்றாகப் புலப்படும்.