உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

இளங்குமரனார் தமிழ்வளம் 1

ார

வீழும் அருவி நீரைப் ‘பாடிப்பால்' என்பது குற்றால வட் வழக்கு. அருவி தந்த அறிவுக் கொடை இவ் வாட்சி பொது மக்கள் புலமை வளம் அல்லவோ இத்தகைய சொற்படைப்பு! பாந்தம்:

குழி, பள்ளம், ஓட்டை என்னும் பொருள்களில் குமரி மாவட்ட வட்டார வழக்காகப் பாந்தம் என்னும் சொல் வழங்குகின்றது. பாத்தி என்னும் பொருளில் நெல்லை, முகவை மாவட்ட வழக்குகளில் உள்ளது. ‘பா” என்னும் முதனிலை விரிவுப் பொருள் தருவது. அகன்ற குழி, பள்ளம், பாத்தி என்பதை விளக்கும்.

பாம் பிஞ்சு:

பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம். பூம் பிஞ்சு என்பது செட்டி நாட்டு வழக்கில் பாம்பிஞ்சு எனப்படுகிறது. பாவுதல் என்பது ஒன்றி அல்லது பரவி இருத்தல். பூவொடு ஒன்றி இருக்கும் பிஞ்சு பாம் பிஞ்சு எனப்பட்டிருக்கலாம். பாம் பிஞ்சு=மிகப் பிஞ்சு.

பாம்பேறி:

கிணறுகளின் உள்ளே பாறைகண்ட

ம்

அளவில்

ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச் சுவர் எழுப்புவது வழக்கம் அச் சுற்றுவெளிக்கு ஆளோடி என்பது பெயர். இது கல்வெட்டுகளிலும் உண்டு. பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர். பாம்பின் சட்டை பகுதியில் கிடத்தல் கண்டு அப் பெயரீடு உண்டாகியதாம்.

பாலாடை:

.

·

அப்

பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது. பாலடை என்பது பாலாடை எனப்பட்டிருக்கலாம். பால் விட்டுப் புகட்டும் (ஊட்டும்) சங்கு. சங்கை, ஊட்டி என்பர்.

பாவாடை:

டை குறுகி விரிந்து பரவிய ஆடை பாவாடை எனப் படுதல் பொதுவழக்கு. பாகடை (பாகால் செய்யப்பட்ட