உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

பெரிய வீட்டுப் பொழுது:

375

இரவுப்

வைப்பு சின்னவீடு என்று வைத்திருப்பார் பொழுதில் அவண் தங்கி, தம் மனை மக்கள் இருப்பார் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது விடியல் ஆதலால், அதனைப் பெரிய வீட்டுப் பொழுது என்பது மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது.

பெருக்கான்:

எலியில் பெரியது பேரெலி. அதனைப் பெருச்சாளி என்பதும் பொண்டான் என்பதும் உண்டு. பேரெலியைப் பெருக்கான் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காக உள்ளது. பெருக்கான்=பெரியது. கொங்குப் பொது வழக்கு எனவும் கூறலாம்.

பெரும் பயறு:

சிறு பயறு என்பது ஒருவகைப் பயறு. அதனினும் பெரியது பெரும் பயறு எனப்படுகிறது. இது குமரி மாவட்ட வழக்கு. பெரும் பயற்றைத் தட்டப் பயறு, தட்டாம் பயறு எனல் பொது வழக்கு. அதன் பூ, தட்டான் பறவை போல இருப்பது பார்க்கத் தக்கது.

பேடு:

நண்டு குடியிருக்கும் வளையைப் பேடு என்பது உசிலம் பட்டி வட்டார வழக்காகும். 'பேடு' என்பது பெட்டி போலும் முதுகு உடைய நண்டு. நண்டின் கரு முதிர்ந்து குஞ்சு வெளிப் படும்போது மூடு பெட்டி போன்ற அதன் மேல் பகுதி வெடித்துக் குஞ்சுகள் வெளிப்படும். அது திறவைப்பெட்டி போலவே இருக்கும். அந் நண்டு தங்குமிடம் பேடு எனப்பட்டதாம்.

பேட்டுத் தேங்காய்:

தேங்காய் போன்ற தோற்றம் இருக்கும். ஆனால், அதனை டைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இராது; ராது; வெறுங் கூடாக மட்டுமே இருக்கும். இதனைப் பேட்டுத் தேங்காய் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. மட்டை பெரிதாகி உள்ளீடு சிறுத்து இருப்பதைப் பேட்டுத் தேங்காய் என்பது குமரி மாவட்ட கன்னங்குறிச்சி வட்டார வழக்கு.