உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

387

என்பதாகலாம். தொடுகறியை மாற்றாணம் என்பது திருப்பூர் வட்டார வழக்கு.

மன்னுதல்:

தவசத்தைக் கோணிகளில் போடும் போது, இடை வெளி இருந்தால் போடும் பொருள் அளவு சிறுத்துப் போகும். நிரம்பவும் இடை வெளியின்றிப் போட, இப்படி யும் அப்படியும் ப்படியும் குலுக்குவர் கோணியை. அதற்கு மன்னுதல் என்பது பெயர். மன்னுதல் நிறைதல், நிரம்புதல், நிலைபெறல் பொருளது. இது முகவை நெல்லை வழக்கு.

மாக்கான்:

குமரி மாவட்டத்தில் மாக்கான் என்பது தவளை என்னும் பொருளில் வழங்குகின்றது. மணற்கானல் என்பது மணக்கான் மாக்கான் ஆகியிருக்கக் கூடும். தவளை மணல் நிறத்தது; மணலில் வாழ்வது. மணல் தேரை என்னும் பெயரினது. மாங்காய்:

மாவின் காய் என்னும் பொதுப் பொருளில் வழங்காமல் மாங்காய் என்பது ஆட்டின் சிறு நீரகத்தைக் குறிப்பதாகப் புலவுக் கடையினர் வழங்குகின்றனர். இது உவமை வழிவந்த சொல்லாட்சியாகலாம்.

மாங்கு:

மங்கலம்

உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திரு 6 வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு=பக்கம்; பாங்கு என்பது மாங்கு என மாறி இரு பக்கமாகப் பிரிக்கப்படுதலைக் குறித்தது. மாச்சல்:

சோம்பல் என்பது பொதுச் சொல். மடி என்பது இலக்கியச் சொல். இவற்றின் சோர்வுப் பொருளை மாச்சல் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மாய்ச்சல்>மாச்சல். மாய்ந்து போன தாம் நிலை. எனக்கு அவனைப் பார்க்க மாச்சலாக இருக்கிறது என்று அச்சப் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு.

மாட்டுக்கால் விடல்:

L பிணையல் என்றும் சூடடிப்பு என்றும் வழங்கும் பொது வழக்கு, திருப்பரங்குன்ற வட்டாரத்தில் மாட்டுக்கால் விடல்