392
இளங்குமரனார் தமிழ்வளம் 1
―
பழஞ்சொத்து என்பது பொருளாம். சும்> சொம். திரண்டது. சும்மை, பல்வகை ஒலி. சுமை, பொதி.
முதுவர்:
மிகத்
முதியர் என்பது போல முதுவர் என்பதும் பொது வழக்கே. முதுமக்கள் தாழியை நினைவு கூறலாம். முதுவர் என்னும் பழங்குடி மக்கட் பெயரும் உண்டு. திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் ‘முதுவர்’ என்பது பெருவழக்கு.
முழுத்தம்:
முழுத்தம்
என்பது முழுமதிநாளில் அல்லது வளர்பிறையில் நடத்தப்படும் திருமண விழாவைக் குறிப்பது. முழுத்தம்; முழுமதி, முழுத்தம் பின்னே முகூர்த்தம் எனப் பட்டது. 24 நிமிட அளவில் சுருங்கியும் போனது. நெல்லை முகவை வழக்காக முழுத்தம் வழங்கிவருகின்றது.
முள்ளா:
முள்ளம்பன்றி என்பதை முள்ளா என்று குமரி மாவட்டத்தார் வழங்குகின்றனர். நெடிய தொடரையும் சொல்லையும் பொருள் விளங்கச் சுருக்குதல் பொதுமக்கள் வழக்காகும். முள்ளா என்பது அதற்கொரு சான்று. 'முள்ளான்’ எனின் புல மக்கள் வழக்காகி விடும்.
முளை:
முளைத்து வருவன எல்லாம் முளை எனப்படுவதேயாம். ஆனால் விளவங்கோடு வட்டாரத்தில் முளை என்பது மூங்கில் என்பதைக் குறித்து வழங்குகின்றது. முளைப்பாரி அல்லது முளைப்பாலிகை என்பது மங்கல விழா, திருவிழாக்களின் அடை யாளமாக இருப்பதையும், முளை என்பது ‘பாவை’ என வழங்கப்படுதலும் எண்ணலாம்.
முளைஞ்சு:
முளை என்பது முளைத்து வருவனவற்றுக்கு எல்லாம் பொது வழக்கு. ஆனால் முளைத்து வந்த பயிரின் குருத்தினை முளைஞ்சு என வழங்குவது இறையூர் வட்டார வழக்காகும். முளைஞ்சு என்பதற்குக் ‘குகை என்னும் பொதுப் பொருள் இ லக்கிய வழக்காகும்.