வட்டார வழக்குச் சொல் அகராதி
399
பாதுகாப்பாகச் சுற்றிக் கட்டும் துணிக்கட்டினை வண்டு கட்டுதல் என்பது தென்னக வழக்கு.
வண்ணம்:
ஒருவர் உடல் பருத்துத் தோற்றப் பொலிவு அடைதலை வண்ணம் என்பது விளவங்கோடு வட்டார வழக் காகும். கோட்டுப் படத்திற்கும் வண்ணந்தீட்டிய படத்திற்கும் உள்ள நிலையை ஒப்பிட்டுக் காணலாம்.
வணக்குதல்:
வணக்குதல் வாட்டுதல், உலரச் செய்தல் என்னும் பொருளது. வதக்குதல் என்பது அப்பொருள் தரும் மக்கள் வழக்குச் சொல். பொரியல் கறியை ஆக்கும் வகையை வணக்குதல் என்பது பழனி வட்டாரவழக்கு. நீர்ப்பதன் சுண்ட வறட்டுதல் வணக்குதல் என்க. வத்தை:
6
வத்தை என்பது பரதவர் (மீனவர்) வழக்குச் சொல். மிதவை வகையுள் ஒன்று அது. வற்றிக் காய்ந்த வற்றல் வத்தல் என வழங்கப்படுவது போல, உலர்ந்த கட்டைகளை இணைத்து மிதவையாகச் செய்யப்பட்டது வத்தை எனப் பெயர் கொண்டு, பின்னர் மிதவை என்னும் பொருளில் படகுக்கு ஆகியிருக்கும். வத்தை=சிறுபடகு.
வதியழிதல்:
பொருள்களின் விளைவோ, உருவாக்கமோ மிகுமானால் விலை சம்பல் (குறைதல்) ஆகிவிடும். அதனால் பொருளைக் குறைந்த விலையில் வாங்குவதுடன், மிக நல்லதாகப் பார்த்தே வாங்குவது வழக்கம். அந் நிலையில் குறையுடையவை அங்கும் இங்கும் கொட்டப்பட்டுக் கிடக்கும். வதியழிதல், வழியில் நடையில் கிடந்து மிதிபடுதலாகும். பொருள் மிகுதி காட்டும் இச் சொல் தென்னக வழக்குச் சொல்லாகும்.
வந்தட்டி:
நிலையாகத் தங்குதல் இல்லாமல் வந்து போகின்றவரை வந்தட்டி என்பது தென்னக வழக்காகும். “அவன் என்றைக்கும் வந்தட்டி தான்! என்ன தொழிலைப் பார்க்கப் போகிறான் என்பது வழக்குத் தொடர்.