உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

இளங்குமரனார் தமிழ்வளம் 1

வாடியம்:

திண்டுக்கல் வட்டாரத்தில் வாடியம் என்னும் சொல் சம்பளம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வாடிக்கையாக (வாரந்தோறும், நாள்தோறும், மாதந்தோறும்) வாங்கும் சம்பளத்தைக் குறித்தது இது.

வாடை:

‘வாடை’ என்பது மணம் என்னும் பொருளது. காற்றைக் குறிப்பதை அன்றி மணத்தையும் குறிக்கும். “என்ன ஏற்றிக் கொண்டு போகின்றான்; வாடை குடலைக் குமட்டுகிறது” என்பர். வாடை என்பது மது, கள், சாராயம் என்பது மதுரை இழுவை வண்டியர் வழக்காகும். அவர்கள் பொருளில் நறுமணம். வாடைக் கொண்டல்:

வடகிழக்கில் இருந்துவரும் காற்றை வாடைக் கொண்டல் என்பது இராமேசுவர வட்டார வழக்கு. வடக்குக் காற்று வாடை; கிழக்குக் காற்று கொண்டல். ஆதலால் வடகிழக்குக் காற்று வாடைக் கொண்டல் எனப்பட்டது மிகப் பொருந்திய ல் பெயரீடாம்.

வாது:

மரத்தின் தாழ் கிளையை வாது என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். வளைந்து தாழ்ந்த கிளையை ‘வாது’ என

வழங்கினர். அக்கி அக் கிளையை வ ளைத்து ஆட்டைத் தின்னச் செய்தல் கண்டு, ஆயன் வெட்டு அறா வெட்டு என்பது பழமொழி. கிளை அற்றுப் போகாமல் வெட்டித் தாழ விடுதலால் வாது என்பது பொருந்துகின்றது. வாது = வளைவு ஆனது. வாய்ப்பாறு:

புலப்பம் எடுத்தல், புலம்புதல் என்பவை ஆற்றாமை சொல்லி அழுதலாம். புலப்பம் எடுத்தலை வாய்ப்பாறு என்பது நெல்லை வழக்காகும். வாய்விட்டு ஆற்றிக் கொள்வது வாய்ப்பாறு ஆயது.

வாயோடு:

உரலில் ஒன்றைப் போட்டு உலக்கையால் குத்தும் போது, உள்ளிடுபொருள் வெளியே வந்து சிந்தாமல் இருப் பதற்காக உரலின் மேல் வாயில் வட்டத்தகடு போடுவது வழக்கம். அதற்கு