408
விரிசோலை:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
L
பனை ஓலையை ஓலையை நெடுகலாக விட்டு மழைக்குப் பயன் படுத்தும் கொங்காணியாகச் செய்வது நாட்டுப்புற வழக்கம். விரிசோலை என்பது கொங்காணியைக் குறிக்கும் நெல்லை மாவட்ட வழக்குச் சொல்லாம்.
விரிவாலை:
ல
பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் மறைவு தட்டியை விரிவாலை என்பது வழக்கம். விரித்துக் கட்டப்பட்ட சுற்று என்பது பொருள். ஆலை என்பது சுற்றாலை, செக்காலை என்பதால் சுற்றுதல் பொருள் தருதல் விளங்கும். கரும்பாலையும் சுற்றாலையாகவே இருந்தது. திருச்சுற்றுடையதே ‘ஆலயம்
என்க.
விருத்துக் கொள்ளல்:
கை கால் மரத்துப் போதல், மரமரத்தல் என்பவை குருதி ஓட்டம் தடைப்பட்டு உணர்வு குன்றிய நிலையாகும். மரத்துப் போனது நீங்கும் நிலையில், குருதி பாய்ந்து செல்லுதல் விருவிருப்பாக இருக்கும்.
L
அதனை விருத்துக் கொள்ளல்
என்பது பெட்டவாய்த்தலை வழக்காகும்.
விருதா:
விருதா என்பது வீண் என்னும் பொருள்தரும் பொது வழக்குச் சொல். ஈனாத மலட்டு மாட்டை ‘விருதா’ என்பது நெல்லை வழக்கு. கன்று என்னும் பயனோ, பால்முதலாம் பயனோ இல்லாமையால் பெற்ற பெயர் அது.
விருதிவீடு:
மணமகளார் வீட்டை விருதிவீடு என்பது திருச்செந்தூர் வட்ட ார வழக்காகும். விருந்தாளியாக வைத்து மாப்பிள்ளையையும் அவர் வீட்டில் இருந்து வருவாரையும் போற்றுதல் வழக்கு வழிப்பட்ட ஆட்சி இது.
விருவிட்டான் பயறு:
திண்டுக்கல் வட்டாரத்தில் விருவிட்டான் பயறு என ஒன்று சொல்லப்படுகிறது. அது மற்றை வட்டாரங்களில் கல்லுப் பயறு எனப்படுவதாகும். விருவிட்டான் என்பதொரு முட்செடி. வெட்டிய உடனே எரிக்கத்தக்கதாக வறண்டசெடி