உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

வெளுத்துள்ளி:

இளங்குமரனார் தமிழ்வளம்

1

வள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் = உள்ளி. உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாமல் தோடாக இருப்பது.

வெளுப்பாங்காலம்:

விடிகாலையை

' வெள்ளென' என்பது தென்னக வழக்கு. காரிருள் படிப்படியே குறைந்து கதிரொளி வரவால் விண்ணும் மண்ணும் வெளுப்பாகும் காலத்தை வெளுப்பாங்காலம் என்பது குமரி மாவட்ட மேல்புர வழக்கு.

வெறுங்கறி:

விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார். வெறுங்கறி என் கின்றனர். அதில் காய், கிழங்கு, கீரை என எதுவும் எதுவும் இல்லா மையால் பெற்ற பெயர் இது.

வேம்பா:

மதுக்கூர் வட்டாரத்தார் வெந்நீர் ஆக்கும் கலத்தை வேம்பா என்கின்றனர். பாய்லர், கீற்றர் என்பவற்றைக் குறிக்க நல்ல வழக்குச் சொல் வேம்பா. வெப்பமாக்குவது வேம்பா ஆயது. இது பொது வழக்கு எனவும் தக்கது.

வேளம்:

வேளம் என்பது செய்தி என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வேள் = விரும்பத்தக்கது. நல்ல செய்தியை வேளம் என்று பின்னர்ப் பொதுவில் செய்திப் பொருள் தந்திருக்கும். தாக்கல் என்னும் முகவை மாவட்ட வழக்குச் சொல் துக்கச் செய்தியை முன்னர்க் குறித்துப் பின்னர்ப் பொதுச் செய்திக்கு ஆனது போன்றது அது.

வேறு விடுதல்:

தனிக் குடித் தனமாக்குதல் என்பதை உசிலம்பட்டி வட்டாரத்தில் வேறு விடுதல் என்கின்றனர். செட்டி நாட்டு வட்டாரத்தில் வேறு வைத்தல் என வழங்குகின்றனர். மனையறம் படுத்தல் என்பது சிலப்பதிகாரம்.