உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

27

களைத் திரித்துச் சொல்பவரை உன் ‘உருட்டுப் புரட்டை இங்கே வைத்துக் கொள்ளாதே' என விழிப்பாக எச்சரிப்பாரும் உண்டு. உருமல் - முணகுதல், வைதல்

உருமுதல் இயற்கையுடையது யது 'உருமு' எனப்படும் இடி. ஆனால் அதனை உருமு என்பதையன்றி உருமல் என்பது ல்லை. உருமல் என்பது நாய் குரைத்தலைச் சுட்டுவதே வழக்கு.

وو

க்கால இளைஞன் அல்லது சிறுவன் வெளியேயிருந்து வருவான். அவன் ஊர் சுற்றி அலைவதை விரும்பாத தாத்தாவோ தந்தையோ வெறுப்பாகச் சொன்னாலும் முணகினாலும் தனக்குத் தானே, “உருமலுக்கு ஒன்றும் குறைவு இல்லை என்பதும் அதைச் சொல்லிச் சிரிப்பதும் பருவச் செயலாகப் போய்விட்டது. உருவுதல் - பறித்தல், தடவல்

மொச்சைக்காய் உருவுதல்' ஒரு பறிப்பு முறை. ஒவ் வொன்றாக எடுக்காமல் ஒரு கையை மடக்கிக் கூட்டிப் பிடித்துக் கொத்தாகப் பறித்தல் உருவுதலாம். கட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்தல் உருவித் தருதல் எனப்படும். “உருவி உருவித் தந்தவன்; பேச மாட்டாய்” என்பது இகழ்வுரை. சுளுக்கு ஏற்படு மானால் விளக்கெண் விளக்கெண்ணெய் தேய்த்து உருவுதல் தடவுதல் என்பது. உருவுதல். வினைக்கு முன் வினை. ‘தடவி உருவல் என்பது இணை முறை. இடக்கரடக்காகவும் இவ்வுருவல் வழங்கும்.

உலக்கைக் கழுந்து - கூர்மையில்லாமை

உலக்கைகளுள் கழுந்துலக்கை என்பதொன்று. அது பூண் தேய்ந்ததாகும். மழுங்கிய கூருடைய அது கழுந்து எனப்படும். அதைப் போல் அறிவுக் கூர்மையில்லாத மடவரைக் கழுந்துலக்கை என்றோ உலக்கைக் கழுந்து என்றோ சொல்வது வழக்கில் உள்ளது. கழுந்து இடிப்பதற்கு உதவாது, இடித்ததை அதன் பின் தீட்டுதற்குப் பயன்படுவது. அதுபோல் சொல்லிய அளவில் புரியாமல் மீண்டும் சொல்லிச் சொல்லி விளக்கினால் புரியும் நிலையில் இருப்பவரே கழுந்தராம்.

66

“கழுந்தராய் உனகழல் பணியாதவர்” என்றார் கம்பர்.

L