உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

39

கஞ்சி காய்ச்சல். கிண்டல் என்பது கீழ்மேலாகவும் மேல் கீழா கவும் புரட்டிப் புரட்டி எடுத்தல். உப்புமா கிண்டல்; கோழி கிண்டல் அறிக. கேளிக்கை, கேளியாய்க் கேலியாய் உள்ளது. நகையாண்டி 'நையாண்டி'யாயிற்று.

கட்டிக் கொடுத்த சோறு - கற்றுக்கொடுத்த கல்வி

கட்டிக் கொடுத்த சோற்றின் அளவு மிகுமா? சுவைதான் மிகுமா? தந்த அளவே அளவாய் அமையும். அதுபோல், கற்றுக் கொடுத்த அளவிலேயே அமையும் கல்வி கட்டிக் கொடுத்த சோறாகச் சொல்லப்படும். "கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த கல்வியும் எந்த மட்டோ அந்த மட்டே” என்னும் பழமொழி இவ்வழக்குத் தொடரின் பொருளை விளக்கும். கட்டிக் கொடுத்த சோறு ‘கட்டுசோறு' தோளில் அதனைப் போட்டுக் கொண்டு போன வழக்கத்தால் தோட் கோப்பு என்பதும் அது. கட்டிக் கொள்ளல் - திருமணம் செய்தல்

திருமணம் செய்தலைத் ‘தாலிகட்டு’ என்பது வழக்கம். திருமண நிகழ்வில் கட்டாயம் இடம்பெறுவது, தாலிகட்டு முடிந்துவிட்டால் திருமண விழா முடிந்தது எனப் பந்தியில் உட்காரும் வழக்கமே அதனைத் தெரிவிக்கும். 'வாழ்த்தினால் என்ன?' வாழ்த்து திருமண மாவதில்லை! தாலிகட்டுதலே திரு மணமாகக் கொள்ளப்படுகிறது. மற்றை மற்றைச் சடங்கு களும் கூட முதன்மையில்லை. அதனால்தான் திருமண விரை வில் தாலிகட்ட மறந்ததுபோல, என்னும் பழமொழி எழுந்தது. தாலிகட்ட மறந்தால் திருமணமே நடந்ததாகாது என்பது தெளிவு. ஆதலால் தாலி காட்டல் இல்லாமலும் தாலி கட்டல் உண்டு என்பதே பொருளாம். முடிச்சுப் போடுதல் கட்டுதல் தானே. மூணுமுடிச்சுப் போடு என்பர். அவிழக்கூடாது என்னும் அக்கறை.

கட்டிப்போடுதல் - அடங்கச் செய்தல்

கயிற்றால் கட்டுதல்தான் கட்டுதல் என்பது இல்லை. சொல்லால் கட்டுதலும் கட்டே. கட்டளை, கட்டுரை, கட்டுப் பாடு, கட்டுப்படுத்தல், கட்டுமானம் என்பனவெல்லாம் கயிற் றொடு தொடர்பில்லாக் கட்டுகளே. சிலர் கொதித்து எழும் நிலையிலும் ஒரு சொல்லால், ஒரு விரலசைப்பால், ஒரு கண் ணிமைப்பால் கொதியாது அடங்கியிருக்கச் செய்து விடுவது உண்டு. அவ்வாறு அடங்கியவர், “என்னைக் கட்டிப் போட்டு