உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

கண்பார்த்தல் - அருளல்

43

கண்திறத்தல், கண்நோக்கு என்பவும் இப்பொருளவே. கண்ணைத்திறந்து பார்த்தலெல்லாம் அருளல் பொருளில் வருவன வல்ல, ஒருவர் நோயுற்றபோது கடவுள்தான் கண்பார்க்க வேண்டும் என்பர். பண்டுவரையா நீங்கள் கண்பார்த்தால் தான் ஆகும் என்பர். 'கண்பார்வை' படவேண்டும் என்பதற்காகவே பெருஞ்செல்வர் பெரும்பதவியர் ஆகியோர் திருமுன் காத்துக் கிடப்பவர் பலர். கண்பார்த்தல் என்பது பொதுப் பொருளில் நீங்கிக் கண்ணோட்டம் என்னும் சிறப்புப் பொருளில் வரும் வழக்கு ஈதாம்.

கண்மூடல் - சாதல்

கண்ணைமூடல் உறங்குதலுக்கும் உண்டே, கண்ணிமை மூடாமலே உறங்குபவரும் உளர். இக்கண்மூடல் இறப்பைக் குறிக்கும். கண்ணடைத்தல் என்பதும் இது.

இறப்பைக் குறிக்கும் வழக்கு மொழிகள் மிகப்பல. ‘இறப்பு’ என்பதும் கூட கூட நேர் சொல் அன்று. வழக்குச் சொல்லே. இறத்தல்’ கடத்தல் என்னும் பொருட்டது. வீட்டைக் கடந்து நன்காட்டை அடைதல் இறப்பு எனப்பட்டது. சாவின்மேல் கொண்ட அச்சம் அச்சொல்லைச் சொல்லவும் விரும்பாமல் குறிப்பாலும், மங்கல வழக்காலும், உறுப்புச் செயலறுத லாட்சியாலும் சொல்ல வைத்ததாம். கண்மூடல் என்பது உறுப்புச் செயலறுதலாட்சியால் சாவை உணர்த்திற்று. பேச மறத்தல்’ ‘மூச்சு விடமறத்தல்' என்பவையும், இவ்வகைய. கண்மூடி - மூடன் ; அறிவிலி

وو

கண் என்பது கண் என்னும் உறுப்பைக் குறித்து அதன் மேல் அறிவு என்னும் பொருளும் தரும். “கண்ணுடையர் என்பவர் கற்றோர்” “எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்,” “கற்றறறிவில்லாமாந்தர் கண்கெட்ட மாடேயாவர்” என்பன போன்றவற்றால் கண் என்பதற்கு அறிவுப் பொருள் உள்ளமை தெளிவாம், மற்றும் கண்ணை மூடிக் கொண்டு ஒளிந்தவரைத் தேடிப்பிடிப்பவனும் முட்டாததில் முட்டி, தட்டாததில் தட்டி, பிடிக்காததைப் பிடித்துப் பெரும்பாடுபடுவது போல் அறிவின்றிப் பலப்பலவும் செய்பவனும் கண்மூடி எனப்பட்டான் என்க. கண் மூடிவழக்கம் மண் மூடிப்போக முயன்றார் வள்ளலார்.

L